அதானி சறுக்கலில் இருந்து மீள்வாரா? கடன் கொடுக்க முன்வந்திருக்கும் 3 வெளிநாட்டு வங்கிகள்

ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கைக்குப் பிறகு மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துக் கொண்டிருக்கும் அதானி குழுமத்துக்கு ஜப்பானைச் சேர்ந்த 3 மிகப்பெரிய வங்கிகள் கடன் கொடுக்க முன்வந்திருக்கின்றன.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 9, 2023, 07:49 AM IST
  • அதானி குழுமத்துக்கு கடன்
  • 3 ஜப்பான் வங்கிகள் முடிவு
  • சறுக்கலில் இருந்து மீள வாய்ப்பு
அதானி சறுக்கலில் இருந்து மீள்வாரா? கடன் கொடுக்க முன்வந்திருக்கும் 3 வெளிநாட்டு வங்கிகள் title=

ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை 

இந்தியாவின் முன்னணி தொழிலபதிபரான அதானி உலக பணக்காரர் பட்டியலில் வேகமாக உயர்ந்து டாப் 5-க்குள் நுழைந்தார். அவரின் அசுர வளர்ச்சியைக் கண்டு உலகம் வியந்து பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் நிறுவனம் மிகப்பெரிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதானி குழுமத்தைப் பற்றிய அந்த ஆய்வறிக்கை, நிதி பரிமாற்றங்கள் மற்றும் பங்கு முதலீடுகள் குறித்து ஆதாரங்களுடன் வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு மிகப்பெரிய நெருக்கடியாக அமைந்தது. பங்குகளை உயர்த்த செய்யப்பட்ட தரவுகளையும் ஹிண்டன்பெர்க் பொதுவெளியில் வைத்தது.

மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுவோருக்கு மிகப்பெரிய அப்டேட், அரசு செய்ய புதிய மாற்றம்

சரிந்த அதானி சாம்ராஜ்ஜியம்

இந்த ஆய்வறிக்கை அதானி குழுமத்தை சூறாவளியாக சுழன்றடித்தது. இந்திய பங்குச்சந்தை மார்க்கெட்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்த அதானி குழுமத்துக்கு கடன் கொடுக்க மறுத்த முன்னணி வங்கிகள், அந்த நிறுவனம் கொடுக்கும் ஆவண பத்திரங்களை சான்றாக எடுத்துக் கொள்ளவும் மறுத்துவிட்டன. மேலும், கொடுத்த கடன்களுக்கான தொகையை திருப்பிக் கொடுக்கவும் அழுத்தம் கொடுத்தன. பல முனைகளில் இருந்தும் எழுந்த தாக்குதல்களால் ஆடிப்போன அதானி குழுமம், உடனடியாக இதனை சரிகட்டும் முயற்சியில் இறங்கியது. இந்த பிரதிபலிப்பு அதானி குழும நிகர மதிப்பிலும் எதிரொலிக்க தொடங்கியது.

ஜப்பான் வங்கி கடன்

அதாவது அதானியின் சொத்துமதிப்புகள் கிடுகிடுவென சரியத் தொடங்கின. உலக பணக்காரர் பட்டியலிலும் 30 இடங்களுக்கு மேல் தள்ளப்பட்டார். ஜனவரியில் வெளியான ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கைக்குப் பிறகு இரண்டு மாதங்களாக சிக்கல்களை எதிர்கொண்ட அதானி குழுமம், பிரச்சனைகளில் இருந்து வெளிவர பல்வேறு யுக்திகளை கையாண்டது. அதற்கு பலனும் கிடைக்க தொடங்கியிருக்கிறது. இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்ய தொடங்கின. அதன் தொடர்ச்சியாக இப்போது ஜப்பானைச் சேர்ந்த 3 பெரிய வங்கிகளான மிட்சுபிஷி யுஎஃப்ஜே நிதிக் குழு, சுமிடோமோ மிட்சுய் வங்கி மற்றும் மிசுஹோ நிதிக் குழு ஆகியவை அதானிக்கு கடன் கொடுக்க முன் வந்திருக்கின்றன.

GQG பார்ட்னர் முதலீடு

இது தவிர, முதலீட்டாளர் GQG பார்ட்னர்கள் மீண்டும் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், GQG பார்ட்னர்கள் அதானி எண்டர்பிரைசஸ் (AEL), அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகியவற்றில் ரூ.15,446 கோடி முதலீடு செய்துள்ளனர். ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அதானி குழுமத்தை அம்பலப்படுத்திய நேரத்தில் இந்த முதலீடு செய்யப்பட்டது. இப்போது மீண்டும் குறிப்பிட்ட தொகையை அதானிக்கு முதலீடு செய்ய அந்தக் குழு முடிவெடுத்திருக்கிறது. 

எவ்வளவு கடன்?

அதானி குழுமத்தின் கடன் 31 மார்ச் 2023-ல் ரூ. 2.27 டிரில்லியன் ஆகும். இதில் 39% பத்திரங்களில் உள்ளது. 29% சர்வதேச வங்கிகள் மற்றும் 32% இந்திய வங்கிகள் மற்றும் NBFC-களில் இருக்கிறது.

மேலும் படிக்க | EPFO மிகப்பெரிய அப்டேட்: அதிகரிக்கிறது குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News