8th pay commission: புதிய ஓய்வூதியக்குழு அமைக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்!

7வது ஊதியக்குழு தொடரும் என்றும் 8வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பாக எந்த திட்டமும் அரசு பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Aug 11, 2022, 06:35 AM IST
  • புதிய ஊதியக் குழுவில் டிஏ உயர்வு போன்ற அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 8வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பாக எந்த திட்டமும் அரசு பரிசீலனையில் இல்லை.
  • 7வது ஊதியக்குழுவானது மீண்டும் 2026 வரை அமலில் இருக்கும்.
8th pay commission: புதிய ஓய்வூதியக்குழு அமைக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்! title=

மத்திய அரசின் 7வது ஊதியக்குழு ஊழியர்கள் மற்றும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்களுக்கான முக்கியமான செய்தி என்னவென்றால் அரசாங்கம் இப்போது புதிய ஊதியக் குழுவில் ஊதிய திருத்தம்- டிஏ உயர்வு போன்ற அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  ராஜ்யசபாவில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தற்போது மத்திய அரசு இதுகுறித்த விளக்கத்தை கொடுத்துள்ளது.  அதன்படி, 7வது ஊதியக்குழு தொடரும் என்றும்  ஊழியர்களுக்கு டிஏ மற்றும் சம்பளம்-ஓய்வூதியம் உள்ளிட்ட இதர படிகள்  வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.  அதுமட்டுமல்லாது 8வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பாக எந்த திட்டமும் அரசு பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இந்த 7வது ஊதியக்குழுவானது மீண்டும் 2026 வரை அமலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏழு ஊதியகுழுக்களும் 1947 முதல் அமைக்கப்பட்டது.  ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு ஊழியர்களின் ஊதிய அமைப்பை மாற்ற புதிய ஊதியக் குழு அமைக்கப்படுகிறது.  கடந்த 2014ல் தான் 7-வது ஊதியக் குழு உருவாக்கப்பட்டது, மேலும் 2026-ல் புதிய ஊதியக் குழு அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இது நடக்காது என்று அரசு தெரிவித்துள்ளது.  இது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா? 

ஊழியர்களுக்கு பணவீக்க உயர்வு காரணமாக சம்பளத்துடன் டிஏ வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  அதே நேரத்தில் டிஏ 6 மாத இடைவெளியில் திருத்தம் செய்யப்படுகிறது.  ஊழியர்கள் மற்றும்  ஓய்வூதியதாரர்களின் சம்பள ஓய்வூதியத்தை மறுபரிசீலனை செய்ய மற்றொரு புதிய சம்பள கமிஷன் தேவையில்லை என்றும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறினார்.  மேலும் கூறுகையில் மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை எந்த நேரத்திலும் மாற்றியமைக்கலாம், அதற்காக 8வது ஊதியக் குழு தான் அமைக்க வேண்டும் என்கிற எவ்வித அவசியமுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | ரூ. 96,000 வரை உயரப்போகும் அரசு ஊழியர்களின் சம்பளம்! முழு விவரம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News