7th Pay Commission: ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.49,420 அதிகரிக்க வாய்ப்பு!

7th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய ஊழியர்களின் சம்பளம் தவிர, அடிப்படை சம்பளம் மற்றும் ஃபிட்மென்ட் பேக்டர் மூலம் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Nov 28, 2022, 10:40 AM IST
  • ஃபிட்மென்ட் பேக்டர் காரணி விரைவில் அதிகரிக்க அதிக வாய்ப்பு.
  • சம்பளத்திலும் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்படும்.
  • அலவன்ஸ்கள் தவிர்த்து ஊழியர்களின் சம்பளம் அதிகமாகும்.
7th Pay Commission: ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.49,420 அதிகரிக்க வாய்ப்பு! title=

மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் விரைவில் மிகப்பெரிய தொகை ஊதியமாக கிடைக்கப்போகிறது, அதாவது மத்திய ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் பேக்டர் காரணி விரைவில் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  நீண்ட நாட்களாக அரசு ஊழியர்கள் ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர், அவர்களது கோரிக்கையின் ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்பது தான்.  அரசு ஊழியர்களின் கோரிக்கையின்படி ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்தினால் அவர்களது சம்பளத்திலும் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்படும்.

அரசாங்கமானது அடுத்த ஆண்டு யூனியன் பட்ஜெட்டுக்குப் பிறகு, ஃபிட்மென்ட் காரணியை அதிகரிக்கும் முடிவை பரிசீலிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  தற்போது அரசாங்கம் ஃபிட்மென்ட் பேக்டரை 3 மடங்கு உயர்த்தினால், அலவன்ஸ்கள் தவிர்த்து ஊழியர்களின் சம்பளம் 18,000 X 2.57 = ரூ 46,260 ஆக இருக்கும்.  அதேசமயத்தில், ஊழியர்களின் கோரிக்கைப்படி அரசாங்கம் ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்தினால் சம்பளம் 26000 X 3.68 = ரூ.95,680 ஆக இருக்கும்.  3 மடங்கு ஃபிட்மென்ட் பேக்டரை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், அடிப்படை சம்பளம் ரூ 21000 ஆகவும், அலவன்ஸ்கள் தவிர்த்து மொத்த சம்பளம் 21000 X 3 = ரூ 63,000 ஆகவும் இருக்கும்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு வழங்கிய முக்கிய செய்தி, கட்டாயம் படிங்க

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய ஊழியர்களின் சம்பளம் தவிர, அடிப்படை சம்பளம் மற்றும் ஃபிட்மென்ட் பேக்டர் மூலம் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது, அதனால் ஃபிட்மென்ட் பேக்டர் உயரும்போது ஊழியர்களின் சம்பளமும் உயரக்கூடும்.  அகவிலைப்படி, பயணப்படி மற்றும் வீட்டு வாடகை அலவன்ஸ்களுடன் ஃபிட்மென்ட் காரணி 2.57 பெருக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறது.  அலவன்ஸ்களுடன் மாதாந்திர வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராஜுவிட்டி போன்றவையும் சேர்த்து சம்பளத்தில் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு ஷாக்: ரயிலில் உணவு வாங்க இனி அதிக செலவாகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News