Ambani vs Adani: அம்பானிக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் அதானி: இது 5ஜி போட்டி

டெலிகாம் நெட்வொர்க்கில் கோலோச்சும் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக, அதானி குழுமம் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 9, 2022, 06:27 PM IST
  • அம்பானிக்கும் அதானிக்கும் இடையிலான தொழில் போட்டி தொடங்குமா?
  • அம்பானியின் துறையில் கால் பதிக்கும் கெளதம் அதானி
  • தொழிற்துறை ஜாம்பவான்களின் போட்டியால் மக்களுக்கு லாபமா
Ambani vs Adani: அம்பானிக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் அதானி: இது 5ஜி போட்டி title=

புதுடெல்லி: ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியாவுக்கு போட்டியாக அதானி குழுமத்தின் டெலிகாம் நெட்வொர்க் களம் இறங்குகிறது! இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கும் 5G ஏலத்திற்குப் பிறகு தொழில்நுட்ப களத்தில் அம்பானி மற்றும் அதானியின் மோதலால் வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் சேவைகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
 
டெலிகாம் நெட்வொர்க்கில் கோலோச்சும் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக, அதானி குழுமம் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்கிறது. 

எனவே, விரைவில் மொபைல் பயனர்களுக்கு புதுவிதமான லாபங்கள் கிடைக்கலாம். அம்பானியும் அதானியும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளையும் வசதிகளையும் அறிவிக்கலாம் என்றும், இனிமேல், அதானியின் சிம் கார்டுகளும் வீடுதோறும் புழக்கத்துக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய மொபைல் பயனர்களுக்கு இது நல்ல செய்தியாக இருக்கலாம். அம்பானி குழு சில ஆண்டுகளுக்கு முன்பு ஜியோ நெட்வொர்க்கைத் தொடங்கியதை அடுத்து, இந்தியாவில் இணையத்தின் புதிய சகாப்தம் தொடங்கியது. இப்போது அதானி குழுமமும் தனக்கென ஒரு புதிய தொலைத்தொடர்பு நெட்வொர்க்கை தொடங்க உள்ளது.

மேலும் படிக்க | RIL: ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா 

இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரும், மூத்த தொழிலதிபருமான கெளதம் அதானி, தொலைத்தொடர்பு துறையில் நுழையப் போகிறார். இது நடந்தால் தொலைத்தொடர்பு துறையில் அதானி குழுமத்தின் நேரடி போட்டி ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களோடுதான் இருக்கும்.

டெலிகாம் துறையில் அதானியின் 5ஜி நுழைவு

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்பதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நேற்றுடன் (2022, ஜூலை 8) முடிந்துவிட்டது. 5G அலைக்கற்றை ஏலத்திற்கு 4 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.  

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி குழுமம் ஆகிய நான்கு நிறுவனங்களும் இந்த ஏலத்தில் மோதுகின்றன. 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு விண்ணப்பித்தவர்களின் தகுதியானவர்களின்விவரங்கள் ஜூலை 12-ம் தேதி வெளியிடப்படும்.

ஏலம் ஜூலை 26-ம் தேதி நடைபெறும் 

5G அலைக்கற்றை ஏலத்தில் 72,097.85 MHz ஸ்பெக்ட்ரம் வழங்கப்படும், இதன் மதிப்பு சுமார் 4.3 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இந்த ஏலத்திற்கு ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா என மூன்று தொலைதொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பிதுள்ள நிலையில், அதானி குழுமமும் ஏலத்தில் பங்கேற்கப் போவதாக தகவலறிந்த வட்ட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

மேலும் படிக்க | ஸ்கை குரூஸ் விமான ஹோட்டல்

அம்பானி-அதானி நேரடி போட்டி 
5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் அதானிக்கும் அம்பானிக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்படும். அவர்கள் இருவரும் இந்தியாவின் இரண்டு பெரிய தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்கள் என்ற நிலையில் தங்களின் தொழிலில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். 

கடந்த சில வருடங்களாக இரு தொழிலதிபர்களும் நாட்டின் தொழிற்துறையில் ஆதிக்கம் செலுத்தினாலும் இருவரும் நேருக்கு நேர் மோதியதில்லை. 

குஜராத்தைச் சேர்ந்த இந்த இரு பிரபல தொழிலதிபர்களின் தொழில் வேறாக இருக்கிறது. அம்பானியின் வணிகம் எண்ணெய், பெட்ரோ கெமிக்கல், டெலிகாம் துறை மற்றும் பல சில்லறை வணிகத் துறைகளில் முக்கியமாக இருக்கிறது. 

அதானியின் வணிகம் நிலக்கரி, எரிசக்தி விநியோகம், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் பரவியுள்ளது. இரு தொழிலதிபர்களின் வியாபாரமும் வெவ்வேறு துறைகளில் இருக்கும் நிலையில், அதானி இப்போது அம்பானியின் தொழிலுக்கு போட்டியாக டெலிகாம் துறையில் கால் பதிக்கிறார். இது தொழிற்துறை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் படிக்க | ICF Railway Recruitment 2022: சென்னையில் 876 ரயில்வே காலிப்பணியிடங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News