நாடு முழுவதும், கடந்த ஏழு ஆண்டுகளில் 4.39 கோடி போலி ரேஷன் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நாட்டின் 81.35 கோடி மக்களுக்கு மிகவும் மலிவான விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.
ரேஷன் கார்டு (RATION CARD) என்பது மிக முக்கியமான ஆவணமாகும். அதன் மூலம் மக்கள் உணவு தானியங்கள் மற்றும் பிறவற்றை அரசாங்கத்திடம் மானிய விலையில் மக்கள் பெறுகிறார்கள்.
பெரும்பாலானவர்களிடம் ரேஷன் கார்டு உள்ளது.அவர்கள் அதை பயன்படுத்தவும் செய்கிறார்கள். அவர்களும் அதைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில், நாட்டில் 4.39 கோடி போலி ரேஷன் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்தால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் தொடர்பான இந்த மோசடியின் புள்ளிவிவரங்களை நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் (Government) சமீபத்திய தரவுகளின்படி, 2013 முதல் 2020 வரை, நாடு முழுவதும் 4.39 கோடிக்கும் அதிகமான போலி அல்லது நகல் அல்லது தவறான ரேஷன் கார்டுகள் தவறாக முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள அரசு, இந்த போலி ரேஷன் கார்டுகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது. இவற்றுக்கு பதிலாக, சரியான மற்றும் தகுதியானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நாட்டின் 81.35 கோடி மக்களுக்கு மிகவும் மலிவான விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. இந்த எண்ணிக்கை நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும். தற்போது, அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் முறையே 3 ரூபாய், 2 ரூபாய் மற்றும் 1 ரூபாய் விலையில், 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களை சென்றடைகின்றன. இந்த எண்ணிக்கை மாதாந்திர அடிப்படையில் வாங்கும் மக்களின் எண்ணிக்கை ஆகும்.
நாடு முழுவதும் தொழில்நுட்ப ரீதிலான அமைப்பு மற்றும் வசதியுடன் கூடிய பி.டி.எஸ் (PDS) என்னும் பொது விநியோக முறையை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் இலக்கை நோக்கிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது இதுபோன்ற ஏராளமான போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
ALSO READ | புகார் கொடுப்பவர் SC/ST என்பதால் மட்டுமே, உயர்சாதியினர் சட்ட உரிமையை மறுக்க முடியாது: SC
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR