72% ரூ. 2000 நோட்டுகள் திரும்ப வந்துவிட்டன... மொத்தம் எவ்வளவு மதிப்பு தெரியுமா?

2000 Rupee Note Updates: 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ஆர்பிஐ தெரிவித்திருந்த நிலையில், தற்போது 72 சதவீத நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 25, 2023, 05:51 PM IST
  • மே 19ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
  • ஜூன் 8ஆம் தேதி 50 சதவீத நோட்டுகள் பெறப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
  • மேலும், நடப்பு நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சி அதிகமாகும் - ஆர்பிஐ
72% ரூ. 2000 நோட்டுகள் திரும்ப வந்துவிட்டன... மொத்தம் எவ்வளவு மதிப்பு தெரியுமா? title=

2000 Rupee Note: பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு தொடர்ந்து நல்ல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒருபுறம், நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது. ஏனென்றால், இந்த ஆண்டு ஏப்ரலில் சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்த 5.9 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட இது மிக அதிகமாகும். 

அதே நேரத்தில், ரேட்டிங் ஏஜென்சியான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை 6.3 சதவீதமாக இருக்கும் எனவும் கணித்திருக்கிறது. மறுபுறம், 2000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைப்பதால் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய ஆபத்தை நிறுத்துவதற்கான நல்ல செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது.

72% திரும்பிவிட்டது

முன்னதாக, ஜூன் 8ஆம் தேதி பணமதிப்பீட்டுக் கொள்கை ஆய்வுக்குப் பிறகு, ரூ.1.8 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வந்ததாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார். இது புழக்கத்தில் இருந்த மொத்த 2000 ரூபாய் நோட்டுகளில் 50 சதவீதமாகும். இதில், சுமார் 85 சதவீதம் வங்கிக் கிளைகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவை பிற மதிப்புகளின் நோட்டுகளாக மாற்றப்பட்டன. இந்நிலையில், தற்போது 72 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரூ.2.62 லட்சம் கோடி மதிப்புள்ள இந்த உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளன அல்லது வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பான் கார்ட் வேலைசெய்யவில்லை என்றால் இவ்வளவு ஆபத்துகளா?

'பொருளாதாரத்தில் பாதகமான பாதிப்பு இல்லை'

ரூ. 2000 நோட்டுகள் வாபஸ் பெறுவதால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டபோது, "தற்போது வாபஸ் பெறப்படும் ரூ.2000 நோட்டுகளால் பொருளாதாரத்தில் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் ஏற்படாது என்பதை நான் தெளிவாக கூறுகிறேன், அச்சப்பட வேண்டும்" என்றார். இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து 2000 ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதன் மூலம் நுகர்வு அதிகரிக்க முடியும் என்றும், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 6.5 சதவீதத்திற்கும் அதிகமாக வைத்திருக்க முடியும் என்றும் எஸ்பிஐ ஆய்வறிக்கை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த அறிக்கையில், 'ரூ. 2000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதன் விளைவுகளால் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 8.1 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023-24 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ரிசர்வ் வங்கியின் மதிப்பீடான 6.5 சதவீதத்தை விட அதிகமாக இருக்கலாம் என்ற எங்களது மதிப்பீட்டை இது உறுதிப்படுத்துகிறது" என குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து சக்திகாந்த தாஸிடம் கேட்டபோது, 'ரூ. 2000 நோட்டை வாபஸ் பெற முடிவு செய்தபோது, அதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த முடிவின் விளைவு என்னவாக இருக்கும், அது பின்னர் தெரியும், ஆனால் ஒன்றை நான் உங்களுக்கு தெளிவாகச் சொல்கிறேன், இப்போது 2000 ரூபாய் நோட்டை வாபஸ் செய்பவர்கள், பொருளாதாரத்தில் எந்தவிதமான பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தாது. எவ்வளவு சாதகமான முடிவு வரும் என்பது பின்னர்தான் தெரியும்" என்றார். 

மேலும் படிக்க | ஜாக்பார்ட்! அகவிலைப்படியை உயர்த்திய அரசு! எவ்வளவு சம்பளம் உயரும்?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News