2 நாள் Bank Strike: எஸ்பிஐ வங்கி கிளை மற்றும் ATM சேவைகள் பாதிக்கப்படலாம்

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 11, 2021, 11:37 AM IST
  • வங்கி பணிகள் மார்ச் 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் பாதிக்கப்பட வாய்ப்பு.
  • அவசர வங்கி வேலைகள் இருந்தால், அதை இன்று அல்லது நாளை செய்துவிடுங்கள்.
  • 2021-22 நிதியாண்டில், 1.75 இலட்சம் கோடி முதலீட்டிற்கான இலக்கை அடைவதற்கு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயம்.
2 நாள் Bank Strike: எஸ்பிஐ வங்கி கிளை மற்றும் ATM சேவைகள் பாதிக்கப்படலாம் title=

Bank Strike: இரண்டு நாள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்தால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) பணிகள் மார்ச் 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

எஸ்பிஐ வங்கி தரப்பில், இந்திய வங்கிகள் சங்கம் (Indian Banks Association) மற்றும் யுனைடெட் ஃபோரம் (United Forum of Bank Unions) சார்பில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதி அழைப்பு விடுத்துள்ளது எனத் தெரிவித்தது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தால், நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய (State Bank of India) கிளைகளிலும் அலுவலகங்களிலும் வழக்கம் போல வேலை நடைபெறுவதை உறுதி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். ஆனாலும் வேலைநிறுத்தத்தால் வங்கியின் பணிகள் பாதிக்கப்படக்கூடும் என்று எஸ்‌பி‌ஐ (SBI) தரப்பில் கூறப்ப்பட்டு உள்ளது. 

ALSO READ |  அதிக பணம் எடுக்க SBI வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வசதி அறிவிப்பு!

எனவே, வாடிக்கையாளர்களுக்கு சில அவசர வங்கி வேலைகள் இருந்தால், அதை இன்று அல்லது நாளை செய்துவிடுங்கள். மார்ச் 13 (இரண்டாவது சனிக்கிழமை) அன்று வங்கிகள் மூடப்படும் என்பதால், அடுத்த நாள் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பின்னர் 15 வது 16 ஆம் தேதி (திங்கள், செவ்வாய்-வங்கி வேலைநிறுத்தம்). எனவே வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் வேலைகளை முடித்துக்கொள்ளுங்கள்.

மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வங்கி வேலைநிறுத்தத்திற்கு ஒன்பது தொழிற்சங்கங்களின் கூட்டு அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU), அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA), அகில இந்திய வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பு (AIBOC), வங்கி ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு (NCBE), அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம் (AIBOA), இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (BEFI), இந்திய தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (INBEF), இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ் (INBOC), வங்கித் தொழிலாளர்களின் தேசிய அமைப்பு (NOBW) மற்றும் வங்கி அதிகாரிகளின் தேசிய அமைப்பு (NOBO) போன்றவை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.  

ALSO READ |  வங்கி தொழிற்சங்கங்கள் முதலீட்டுக்கு எதிராக போராட்டம், மார்ச் 15,16 ஸ்டிரைக்!

மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22 நிதியாண்டில், 1.75 இலட்சம் கோடி முதலீட்டிற்கான இலக்கை அடைவதற்கான ஒரு பகுதியாக பொதுத்துறை வங்கிகளை (Public Sector Banks) தனியார்மயமாக்குவதாக அறிவித்தார்.

மத்திய அரசாங்கம் கடந்த ஆண்டு 10 பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைத்தது நான்கு வங்கியின் கீழ் வந்தது.  இதன் விளைவாக, மொத்த  பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27 ல் இருந்து 12 ஆக குறைந்தது.

ALSO READ |  Canara Bank வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: இந்த நாட்களில் வங்கி சேவைகள் பாதிக்கப்படும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News