நிபா வைரஸ் தாக்கம்: தமிழகம் மற்றும் கேரள எல்லையில் ரத்த பரிசோதனை!

தமிழகத்தில் நிபா வைரஸ் பரவக்கூடும் அபாயம் உள்ளதால் தமிழக-கேரள எல்லை பகுதிகளில் ரத்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது!

Last Updated : May 22, 2018, 11:41 AM IST
நிபா வைரஸ் தாக்கம்: தமிழகம் மற்றும் கேரள எல்லையில் ரத்த பரிசோதனை! title=

கேரளாவில் நிபா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. உயிர் கொல்லி வைரசான நிபா, கேரளாவில் படு வேகமாக பரவி வருகிறது. கேரளா மாநிலத்தில்  நிபா வைரஸ் தாக்குதலால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவக்கூடும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், கன்னியாகுமரியில் இருந்து கேரளா சென்று வருபவர்களிடம் ரத்த பரிசோதனை செய்ய மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். இதற்காக, தமிழக - கேரள எல்லையான பகுதிகளில் உரிய ஏற்பாடுகள் செய்யபட்டு, தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிபா வைரஸானது பழந்தின்னி வௌவால்களால் பரவுகிறது. வௌவால்கள் கடித்த பழங்களை சாப்பிடுவதால் இந்த காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த நிபா வைரஸ் கோவா மற்றும் மும்பைக்கு பரவ வாய்ப்புகள் இருப்தாக கூறிய கோவா சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரெனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து கேரளா சுகாதார துறை அதிகாரிகளிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிபா வைரஸின் அறிகுறிகளாக கடுமையான தலைவலி, காய்ச்சல், மயக்கம், மனக்குழப்பம் போன்றவை ஏற்பட்டு மூளைக் காய்ச்சலாக தீவிரமடையும்.இந்த வைரஸின் தாக்கம் மிகத் தீவிரமாகும் போது கோமா ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News