கர்நாடகா தேர்தல்: பாஜக வேட்பாளர் திடீர் மரணம்!

பெங்களூர் நகரின் ஜெயநகர் தொகுதி வேட்பாளர் பி என் விஜய்குமார் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 

Last Updated : May 4, 2018, 09:15 AM IST
கர்நாடகா தேர்தல்: பாஜக வேட்பாளர் திடீர் மரணம்! title=

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் மே மாதம் 12-ம் தேதி நடைபெறுகிறது. தற்போது கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், பா.ஜ.க ஆட்சியை பிடிக்கவும் கடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், பெங்களூர் நகரின் ஜெயநகர் தொகுதி வேட்பாளர் பி என் விஜய்குமார் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 

ஜெயநகரில் இருந்து பாஜக கட்சிக்காக இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வானவர் விஜயகுமார். தற்போது அந்த பகுதியின் எம்எல்ஏவாக அவர் இருக்கிறார். 

இந்நிலையில் நேற்று ஜெயநகரில் 4வது பிளாக்கில் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கும் போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி அதிகாலை 1 மணிக்கு மரணம் அடைந்துள்ளார். மேலும் ஜெயநகரில் பாஜக அறிவித்து இருந்த வேட்பாளர் மரணம் அடைந்ததை உள்ளதால், தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

Trending News