நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியினை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் ஆணையம் தேதியினை வெளியிடுவதற்கு முன்னதாக பாஜக-வின் தொழில்நுட்ப தலைமை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் சரியான தேதியினை பதிவிட்டுள்ளார்.
கர்நாடகவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைப்பெற்று வருகிறது. ஆளும் அரசாங்கத்தின் ஆட்சி காலம் முடவடையவுள்ள நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியினை இன்று தலைமை தேர்தல் அதிகாரி ராவத் தெரிவித்தார்.
ஆனால் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே பாஜக-வின் தொழில்நுட்ப தலைமை அதிகாரி அமித் மலவியா தனது ட்விட்டர் பக்கத்தில் சரியான தேதியினை பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Certain things may have leaked for which Election Commission will take appropriate action: Chief Election Commissioner OP Rawat on the question how BJP's IT Cell head Amit Malviya had put dates of Karnataka elections on social media pic.twitter.com/pRHTMBvOfN
— ANI (@ANI) March 27, 2018
கர்நாடகா தேர்தல் 2018...
- வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் - ஏப்ரல் 17
- வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் - ஏப்ரல் 24
- கர்நாடக தேர்தல் - மே 12, 2018
- வாக்கு எண்ணிக்கை - மே 15, 2018
- 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.