பிரியங்கா, அனுஷ்கா-வை அடுத்து தற்போது தீபிகாவும் களத்தில்!

பாலிவுட் பிரபலங்கள் பிரியங்கா, அனுஷ்காவினை தொடர்ந்து தீபிகா படுகோனே தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்க திட்டமிட்டுள்ளார்!

Written by - Mukesh M | Last Updated : Apr 15, 2018, 04:15 PM IST
பிரியங்கா, அனுஷ்கா-வை அடுத்து தற்போது தீபிகாவும் களத்தில்! title=

பாலிவுட் பிரபலங்கள் பிரியங்கா, அனுஷ்காவினை தொடர்ந்து தீபிகா படுகோனே தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்க திட்டமிட்டுள்ளார்!

பாலிவுட் நாயகிகளான பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா ஷர்மா ஆகியோர் ஏற்கனவே தயாரிப்பு நிறுவனங்களை வைத்துள்ள நிலையில் தற்போது பத்மாவத் நாயகி தீபிகா படுகோனே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

Purple Pebbles production என்னும் நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப் படங்களை பிரியங்கா வழங்கியுள்ளார். அதேப்போல் Clean Slate Films நிறுவனம் மூலம் அனுஷ்கா ஷர்மாவும் NH10, பில்லோரி மற்றும் பாரி என்னும் வெற்றிப் படங்களை வழங்கினார். இவர்களை அடுத்து தற்போது தீபிகாவும் களத்தில் குதிக்கவுள்ளார்.

இறுதியாக இவரது நடிப்பில் வெளியான பத்மாதி (எ) பத்மாவத் திரைப்படத்திற்கு நாடுமுழுவதும் பெரும் சர்ச்சைகள் எழுந்தது. அதனை அடுத்து இயக்குனர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வந்தார். பின்னர் உடல் நிலை சரியில்லா காரணத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில் தற்போது இவரது புதிய தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதி படுத்தும் விதமாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... "திரைப்படங்களை தயாரிக்கும் ஆசை உள்ளது. ஆனால் அதை பயன்படுத்தி நான் பணம் சம்பாதிக்க விரும்பவில்லை, மாறாக கலைப் படைப்புகளை உறுவாக்க விரும்புகின்றேன்" என குறிப்பிடு இருந்தார்.

Trending News