ஆந்திரா சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக YSR காங்கிரஸ் MP-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்!
ஆந்திரா-விற்கு சிறப்பு அந்தஸ்து வழங்வது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆந்திர மாநில அரசியல் கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் நடைப்பெற்று வருகிறது. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தெலங்கு தேசம்கட்சி, கூட்டணியில் இருந்து வெளியேறியது.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரவும் ஆந்திர கட்சிகள் முடிவு செய்தது. இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் ஆந்திர மாநில MP-க்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அவை நடவடிக்கையை முடங்கிய நிலையில் உள்ளது.
இந்நிலையில் ஆந்திரா-விற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் விவகாரம் தொடர்பாக YSR காங்கிரஸ் MP-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தின் கடைசி நாள் அன்று அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!