ஒவ்வொரு உறவையும் உடைக்க முடியும்.. சீனாவை அச்சுறுத்தும் டிரம்ப்

அமெரிக்கா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவின் ஜி ஜின்பிங்குடன் பேசுவதற்கான மனநிலை இல்லை என்று வியாழக்கிழமை கூறினார், 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 15, 2020, 07:29 AM IST
ஒவ்வொரு உறவையும் உடைக்க முடியும்.. சீனாவை அச்சுறுத்தும் டிரம்ப் title=

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் உலகில் பரவியதை அடுத்து சீனாவுடனான (China)அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trum) நேற்று (வியாழக்கிழமை) அச்சுறுத்தினார். இந்த கொடிய தொற்று 80,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உட்பட உலகளவில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்களைக் கொன்றுள்ளது. நாம் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் (Donald Trum) செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார். நாம் எல்லா உறவுகளையும் உடைக்க முடியும்.

கடந்த பல வாரங்களாக, சீனாவுக்கு (China) எதிராக நடவடிக்கை எடுக்க அதிக அழுத்தங்களுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளாகி வருகிறார். சீனாவின் (China) செயலற்ற தன்மையால், கொரோனா வைரஸ் வுஹானிலிருந்து உலகம் முழுவதும் பரவியுள்ளது என்று அவர்களின் ஆலோசகர் மற்றும் அறிவியல் சிந்தனையாளர்கள் கூறுகின்றனர். 

ஒரு கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் (Donald Trum) , தற்போது சீன (China) அதிபர் ஜி சின்ஃபிங்குடன் (Xi Jinping) பேச விரும்பவில்லை என்று கூறினார். இருப்பினும், சின்ஃபிங்குடன் நல்ல உறவைக் தான் கொண்டுள்ளதாகக் கூறினார். 

சீனா (China) தன்னை ஏமாற்றியுள்ளது என்று டிரம்ப் கூறினார். கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து விசாரிக்க வுஹானின் ஆய்வகத்தை பார்வையிட சர்வதேச சமூகத்தை அனுமதிக்குமாறு அமெரிக்கா பலமுறை சீனாவிடம் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அதை சீனா ஏற்கவில்லை என்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வது தொடர்பான போட்டியில் வல்லரசு நாடுகளுடனான உறவுகளை துண்டிக்கக்கூடும் வகையில் சீனா நடந்துக்கொள்கிறது என்று எச்சரித்துள்ளார்.

Trending News