16 வயது மாணவருடன் காரில் உடலுறவு... பெண் ஆசிரியரை கையும் களவுமாக பிடித்த போலீசார்!

World Bizarre Crime News: அரசுக்கு சொந்தமான பெரிய எஸ்டேட்டில் 16 வயது மாணவருடன் பலமுறை உடலுறவு மேற்கொண்ட பெண் ஆசிரியை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 14, 2024, 03:58 PM IST
  • அந்த ஆசிரியருக்கு வயது 37 ஆகும்.
  • அவரை உடனடியாக பள்ளியில் இருந்து நீக்கிவிட்டனர்.
  • குற்றத்தை ஆசிரியரும் ஒப்புக்கொண்டுள்ளார்.
16 வயது மாணவருடன் காரில் உடலுறவு... பெண் ஆசிரியரை கையும் களவுமாக பிடித்த போலீசார்! title=

World Bizarre Crime News: அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் பெண் ஆசிரியருக்கு எதிராக பாலியல் ரீதியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நியூ ஜெர்ஸியின் டிரெண்டன் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணியாற்று வருபவர் ஜெஸ்சிகா சாவிக்கி, இவருக்கு வயது 37. 

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியை சேர்ந்த ஜெஸ்சிஸ்கா இந்தாண்டில் பள்ளி மாணவர் ஒருவரை பாலியல் ரீதியாக  பலமுறை அத்துமீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். குறிப்பாக, ஜெஸ்சிகா மீது இரண்டாம் நிலை பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குழந்தையின் நலனுக்கு ஆபத்தை விளைவிப்பது என தலா ஐந்து குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

6,393 ஏக்கர் கொண்ட பெரிய எஸ்டேட்டில்...

இவரின் குற்றங்கள் எப்படி வெளிச்சத்திற்கு வந்தது என்றால், ஜெஸ்சிகாவும், அந்த மாணவரும் காரில் நிர்வாணமாக இருந்த நிலையில், நியூ ஜெர்ஸியின் மீன் மற்றும் வனத்துறை ஆய்வாளர்களிடம் சிக்கி உள்ளனர். ஜெஸ்சிகாவுக்கு எதிராக பிறக்கபிக்கப்பட்ட பிரமாணத்தில் கூறப்படும் தகவலின் அடிப்படையில், விசாரணையின் போது ஜெஸ்சிக்கா போலீசாரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். 

அதாவது, அரசின் வனத்துறைக்கு சம்பந்தப்பட்ட அந்த 6,393 ஏக்கர் கொண்ட எஸ்டேட்டில் கடந்த டிசம்பர் மாதம் முதல் குறைந்தபட்சம் ஐந்து முறையாவது எவ்வித பாதுகாப்புமற்ற வகையில் உடலுறவு மேற்கொண்டதாக ஜெஸ்சிக்கா தெரிவித்துள்ளார். மேலும், அந்த மாணவரின் காரின் பின்புற சீட்டில்தான் இருவரும் வழக்கமாக உறவு வைத்துக்கொள்வார்கள் என்றும் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | காதலனுடன் ஆசிரியர் செய்த காரியத்தை பாருங்க... குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - வாழ்நாள் தடை

போலீசார் விசாரணை

அந்த மாணவருக்கு வயது தற்போது 16 ஆகும். இன்னும் அந்த மாணவர் 18 வயதை அடையவில்லை என்பதால் ஜெஸ்சிக்காவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை அன்று ஜெஸ்சிக்காவை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரு வாரக்காலம் அவர் போலீஸ் விசாரணையில் இருப்பார் என கூறப்படுகிறது.

இதுசார்ந்து, பள்ளியின் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,"இதுவரை தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பள்ளி நிர்வாகம் அவரை உடனடியாக பள்ளியை விட்டு நீக்குகிறது. எங்கள் நிர்வாகம் விசாரணை காலகட்டத்தில் அதிகாரிகளிடம் முழு ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்குவோம்" என தெரிவித்துள்ளது. ஜெஸ்சிக்கா ஆண்டுக்கு சுமார் 41 ஆயிரம் அமெரிக்க டாலரை வருமானமாக பெற்று வந்ததும் தெரியவந்தது.

பள்ளி கடும் கண்டனம்

மேலும், இதுகுறித்து பள்ளியின் தலைமை நிர்வாகிகள் கூறுகையில்,"குற்றஞ்சாட்டப்பட்ட அந்த சம்பவம் என்பது எங்களின் தொழில் தர்மத்திற்கு முற்றிலும் எதிரானது. எங்கள் மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயலையும் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. ஒரு ஊழியரின் செயல்களும், நடத்தைகளும் எங்கள் பள்ளியின் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் எவ்விதத்திளும் பாதிக்காது. குறிப்பாக, குற்றஞ்சாட்டப்பட்ட சம்பவம் ஏதும் பள்ளி வளாகத்தில் நடக்கவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.

போலீசாரால் கைது செய்யப்பட்டதும், பள்ளி இணையதளத்தில் இருந்த ஜெஸ்சிக்காவின் சுயவிவர தகவல்கள் அனைத்தும் நீக்கப்பட்டது. அந்த பள்ளியில் அவர் கடந்த 7ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்றும் தெரிகிறது. ஜெஸ்சிக்காவின் சுயவிவர தகவலில் பின்வரும் வாக்கியம் இடம்பெற்றிருக்கும் என்றும் அதன் தற்போது முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதில்,"இங்குள்ள மாணவர்களை புரிந்துகொள்ள முயல்வதும், அவர்கள் சிறந்தவர்களாக உருவாக்கி எதிர்காலத்தில் சிறந்த விளங்கவைப்பது என்பது எனக்கு உண்மையாகவே சந்தோஷத்தை அளிக்கிறது" என குறிப்பிட்டிருந்ததாம்.

மேலும் படிக்க | உடலுறவு... அதுவும் மாணவியுடன் உணவக கழிவறையில் - பெண் ஆசிரியருக்கு வாழ்நாள் தடை!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News