அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப்
தேர்வு செய்யப்பட்ட பின்னர் சில அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறார். பல்வேறு குழுக்களை அமைத்து வருகிறார். மேலும் அவர் அடுத்த மாதம் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
தற்போது பொருளாதார ஆலோசனை குழுவை உருவாக்கி உள்ளார். இக்குழுவில் பெப்சி நிறுவனத்தை சேர்ந்த இந்திரா நூயி சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். மேலும் இந்திரா நூயி சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.