Helicopter Crash: உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து அமைச்சர்கள் குழந்தைகள் என 18 பேர் பலி

Ukraine Crash Casualties: உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்தில் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உட்பட 18 பேர் பலி, 29 பேர் காயம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 19, 2023, 07:34 AM IST
  • உக்ரைனின் கொடூர விபத்து
  • ஹெலிகாப்டர் விபத்தில் 3 குழந்தைகள் பலி
  • உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உட்பட 18 பேர் பலி
Helicopter Crash: உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து அமைச்சர்கள் குழந்தைகள் என 18 பேர் பலி title=

கீவ்: உக்ரைனில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உட்பட 18 பேர் பலி, 29 பேர் காயமடைந்தனர். உக்ரைன் தலைநகர் கிவ்வின் கிழக்கு புறநகர் பகுதியில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 3 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். 10 குழந்தைகள் உட்பட 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி மற்றும் 8 பேர் பயணித்துள்ளனர். புரோவரி புறநகர் பகுதியில் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் உள்துறை அமைச்சர், அமைச்சர் யேவியென் யெனின் மற்றும் செயலாளர் யூரி லுப்கோவிச் ஆகியோரும் உயிரிழந்தனர். இந்த விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், உக்ரைன் நாட்டின் அவசர சேவைக்கு பயன்படுத்தப்படுவது என்று அந்நாட்டின் தேசிய காவல் தலைவர் இஹோர் க்ளைமென்கோ தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | 50 வயதில் 60 வது குழந்தை; அடுத்த ரிலீஸுக்கு மனைவியை தேடும் நபர்!
 
விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகில் குழந்தைகளின் பள்ளி ஒன்று இருந்தது. விபத்தினால் உருவான தீயினால் பள்ளியில் தீப்பற்றியதை அடுத்து, மாணவர்களும் ஆசிரியர்களும் கட்டிடத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டனர். தீப்பற்றி எரிந்த கட்டிடத்தின் முன்பாக ஹெலிகாப்டரின் சிதைபாடுகள் சிதறிக் கிடக்கின்றன.

குளிர்காலத்தில் அதிக பனிமூட்டம் நிலவியதால், புலப்பாடு குறைவாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டர் மோதியதால் விபத்து ஏற்படிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

சமூக ஊடகங்களில் பரவும் சரிபார்க்கப்படாத காட்சிகள் விமானத்தின் எரிந்த எச்சங்கள் தோன்றியதைக் காட்டியது. அருகிலுள்ள கட்டிடங்களின் குப்பைகள் மற்றும் பெரிய உலோகத் துண்டுகளால் நசுக்கப்பட்ட கார் ஆகியவற்றைக் காணலாம். இந்த விபத்து தொடர்பான விசாரணையை மேற்கொள்ள உதவி செய்யத் தயாராக இருப்பதாக ஜெர்மனி உதவிக்கரம் நீட்டியிருக்கிறது.

மேலும் படிக்க | அலுவலகத்தில் உள்ள பயன்படுத்தப்பட்ட பொருட்களை ஏலம் விடும் டிவிட்டர் நிறுவனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News