உலகின் ஆடம்பரமான டைட்டானிக் மூழ்கி நீண்ட நாட்களாகிவிட்டது. ஆனால் அது தொடர்பான கதைகள் இன்னும் மக்களின் இதயங்களிலும் மனதிலும் பசுமையாக உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு, 'தன்குபர்' டைட்டானிக்-2 ஐ மீண்டும் அறிமுகப்படுத்துவதக அறிவித்தபோது, அனைவரின் கவனமும் அதில் குவிந்தது.
காரணம் எதுவாக இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில், கப்பல் கட்டும் தளத்தில் தொடங்குவதற்குப் பதிலாக, இந்தத் திட்டம் காகிதங்களிலும் ஹார்டு டிஸ்க்குகளிலும் புதையுண்டுவிட்டது. தற்போது மீண்டும் டைட்டானிக் கப்பல் தொடர்பான தகவல்கள் கவனத்தைப் பெற்றுள்ளது.
டைட்டானிக் II கடல்களை ஆள வரும் என்று கோடீஸ்வர தொழிலதிபர் கிளைவ் பால்மர் தனது விருப்பத்தை மீண்டும் தெரிவித்துள்ளார். சிட்னி ஓபரா ஹவுஸில் நடந்த ஒரு நிகழ்வில் பால்மர் தனது கனவு திட்டத்தில் மாற்றங்களை வெளிப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியில் டைட்டானிக் II இன் பிரதி வடிவமைப்பை பால்மர் வெளியிட்டார்.
டைட்டானிக் உலகில், அன்பின் அடையாளமாகவும், ஆடம்பரத்தின் அடையாளமாக இருக்கும் என்று பால்மர் தெரிவித்தார். இதை அடுத்து, மீண்டும் டைட்டானிக் கப்பல் தொடர்பான தகவல்கள் பலராலும் நினைவுகூரப்படுகிறது.
டைட்டானிக்கின் பழைய பெருமையை உலகம் எப்போது மீண்டும் பார்க்க முடியும்? என்ற காலக்கெடுவைக் கொடுக்காதது மற்றும் கப்பல் கட்டும் தளத்தை இன்னும் தேர்ந்தெடுக்காததற்கான காரணங்களை பால்மர் தெரிவித்தார்.
ஒரு தசாப்தத்திற்கு முன்னர், லண்டனில் உள்ள ரிட்ஸ் ஹோட்டலில் டைட்டானிக் II கட்டுமானத்தை அறிவித்த பால்மர் இதுவரை அதற்கான முயற்சிகளை எடுக்காவிட்டாலும், உண்மையில் இது புரளியோ, விளம்பரமோ அல்ல என்றும் தான் அந்தத் திட்டத்தை கவனமாக செதுக்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
டைட்டானிக் திட்டம் தாமதமாவது ஏன்?
டைட்டானிக் II திட்டத்தின் தாமதம் பற்றி குறிப்பிட்ட அவர், 2015 இல் பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சிறிது காலம் நிறுத்தப்பட்டது என்று தெரிவித்திருந்தார். 2018 ஆம் ஆண்டில், 2022 க்குள் எல்லாம் சரியாகிவிடும் என்று பால்மர் அறிவித்திருந்தாலும், அந்த காலத்திற்குள் அவரது திட்டம் பலிக்கவில்லை. திட்டத்தில் தாமதம் ஏற்பட்டதற்கு கொரோனா தொற்றும் காரணம் என்று பால்மர் கூறுகிறார்.
டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டுவதற்கு தனது நிறுவனம் கப்பல் கட்டும் தளத்தை தேர்வு செய்துக் கொண்டிருப்பதாக பால்மர் 2023 ஆம் ஆண்டிலேயே கூறியிருந்தார். இப்போது 2027க்குள் திட்டத்தை முடிக்க முடியும் என்று கூறியுள்ளார். டைட்டானிக் கப்பலை உருவாக்குவதற்கான பண ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்த பால்மர், இது தொடர்பான ஏலம் மற்றும் ஒப்பந்தப் பணிகளும் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்டாமரின் போன்ற நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் 56,000 டன் எடையுள்ள டைட்டானிக் II கப்பலின் விலை $500 மில்லியன் முதல் $1 பில்லியன் வரை இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது. பால்மர் தனது திட்டமான டைட்டானிக் II இன் ஒன்பது அடுக்குகளின் விரிவான 3D ரெண்டரிங்ஸைக் கொண்ட 5 நிமிட வீடியோவைக் காட்டினார், டைட்டானிக் II அசல் டைட்டானிக்கின் உட்புற அலங்காரம் மற்றும் கேபின் அமைப்பைப் போலவே இருக்கும் என்று கூறினார்.
ஜேம்ஸ் கேமரூனின் 1997 திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள ஜேக் மற்றும் ரோஸின் காதல் கதையை குறிப்பிட்ட பால்மர், டைட்டானிக் II, டைட்டானிக் I இன் மதிப்புகளை மீட்டெடுக்க விரும்புவதாக தெரிவித்தார். 70 வயதான பால்மர் ஆஸ்திரேலியாவில் எம்.பி.யாக இருந்துள்ளார். அவர் புதிய அரசியல் கட்சியை உருவாக்கினார். புளூ ஸ்டார் லைன் என்ற கப்பல் கட்டும் நிறுவனத்தின் உரிமையாளர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ