காபூலில் பயங்கரவாதிகள் அரசாங்க கட்டிடம் மீது தாக்குதல்: 43 பேர் கொல்லப்பட்டனர்

நேற்று காபூல் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர் எனத் தகவல்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 25, 2018, 12:37 PM IST
காபூலில் பயங்கரவாதிகள் அரசாங்க கட்டிடம் மீது தாக்குதல்: 43 பேர் கொல்லப்பட்டனர் title=

நேற்று(திங்ககிழமை) ஆப்கானிஸ்தான் தலைநகரம் காபூலில் உள்ள அரசு அலுவலகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 43 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் 10 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை பிற்பகலில் அரசு பொதுப்பணி அமைச்சகத்துக்கு வந்த காரில் வந்த பயங்கரவாதிகள் அலுவலகத்துக்கு வெளியே காரில் இருந்தபடியே தனது உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தனர். இதனால் அங்கு புகைமூட்டம் சூழ்ந்தது. இதனைபயன்படுத்தி மற்ற பயங்கரவாதிகள் அரசு பொதுப்பணி அமைச்சகத்துக்கு உள்ளே சென்று துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதனால் பலர் இறந்தனர். அங்கு இருந்த போலீசார் பயங்கரவாதிகளை சுட்டுவீழ்த்தினர்.

திடிரெனே தாக்குதல் நடத்தப்பட்டதால், பொதுமக்கள் அதிகம் இருந்ததால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. பின்னர் சுதாரித்துக்கொண்ட போலீசார் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் போலீசார் என மொத்தம் இதுவரை 43 பேர் பலியாகி உள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த தாக்குதல்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் சமீபத்திய காலங்களில், அரசாங்க கட்டிடத்தை குறிவைத்து பெரும்பாலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். 

ஆப்கானிஸ்தான் நாட்டில் கணிசமான பகுதிகளில் இருந்து தனது ராணுவ துருப்புக்களை அகற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News