திபெத் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவை வரவேற்று சீனாவை சீண்டும் தைவான்...!!!

சீனாவை கோபப்படுத்தும் வகையில் தலாய் லாமாவை தனது நாட்டிற்கு வருகை தர வேண்டும் என தைவான் வரவேற்றுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 6, 2020, 05:23 PM IST
  • அரசியல் சூழ்நிலை மாறும்போது, ​​தனது ஆதரவாளர்களை மீண்டும் தைவானில் பார்க்க முடியும் என தலாய் லாமா நம்பிக்கை வெளியிட்டார்
  • தலாய் லாமா 1989 ல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்
  • சீனா அவரை ஒரு பிரிவினை வாதி என்று குற்றம் சாட்டுகிறது
திபெத் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவை வரவேற்று சீனாவை சீண்டும் தைவான்...!!! title=

சீனாவை கோபப்படுத்தும் வகையில் தலாய் லாமாவை தனது நாட்டிற்கு வருகை தர வேண்டும் என தைவான் வரவேற்றுள்ளது.

பெய்ஜிங் (Beijing ) தைவானின் அதிபரின் இந்த நடவடிக்கையை சந்தேக கண் கொண்டு பார்க்கிறது.  தைவான் ஏற்கனவே சீன குடியரசு என்று அழைக்கப்படும் ஒரு சுதந்திர நாடு என்று தைவான் அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-wen) கூறுகிறார். சீன குடியரசு என்பது தைவானின் அதிகாரப்பூர்வ பெயர் ஆகும்.

ALSO READ | தலாய் லாமாவின் 85 ஆவது பிறந்தநாள்: ஆடம்பர கொண்டாட்டங்களை விடுத்து பிரார்தனை செய்ய கோரிக்

நாடுகடத்தப்பட்ட திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் வருகையை தைவான் வரவேற்கும் என்று அதன் வெளியுறவு அமைச்சகம் திங்களன்று கூறியது.  தலாய் லாமாவை (Dalai Lama) ஒரு ஆபத்தான பிரிவினைவாதி என்று கருதும் சீனா(China) இதனால் எரிச்சல் அடைந்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் முதன்முதலில் அதிகராக சாய் இங்-வென் பதவியேற்றார். சீன உரிமை கோரும் ஜனநாயக தீவான தைவானிற்கு அவர் கடைசியாக 2009 இல் சென்றார்.

ஞாயிற்றுக்கிழமை தைவானில் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு வீடியோ இணைப்பு மூலம் வழங்கிய பிறந்தநாள் செய்தியில், தலாய் லாமா தான் மீண்டும் தைவானுக்கு வர விரும்புவதாக தெரிவித்தார்.

“அரசியல் சூழ்நிலை மாறும்போது, ​​நான் உங்களை மீண்டும் தைவானில் பார்க்க முடியும் என நான் நம்புகிறேன். என்ன நடந்தாலும் நான் உங்களுடன் ஆன்மா மூலம் கலந்து இருப்பேன், ”என்று அவர் தனது இணையதளத்தில் கூறினார்.

ALSO READ | Somaliland தைவான் இடையிலான ஒப்பந்தத்தினால் அதிர்ச்சியில் உள்ள சீனா..!!!

தைவான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜோன் ஓ (Joanne Ou), அவர் தீவுக்குச் வருகை தர கோரும் விண்ணப்பம் இதுவரை அரசுக்கு கிடைக்கவில்லை, ஆனால் பொருத்தமான விதிகளை பின்பற்றி அனுமதி அளிக்கப்படும் என்றார்.

"பரஸ்பரம் மரியாதை  அளிக்கும் வகையில், இரு தரப்பினருக்கும் ஏற்ற ஒரு நேரத்தில், தலாய் லாமா பவுத்த போதனைகளை பரப்புவதற்காக மீண்டும் தைவானுக்கு வர வேண்டும் என வரவேற்கிறோம்" என்று Joanne Ou மேலும் கூறினார்.

கடந்த வாரம் சீனா ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் ஹாங்காங் நகரத்தை விட்டு வெளியேற விரும்பும் மக்களை வரவேற்க தைவான் முன்வந்ததிலிருந்து தைபே-பெய்ஜிங் உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திபெத் மீது சீன அரசு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, 1959 ஆண்டு அங்கிருந்து தப்பி, இந்தியாவில் வாழ்ந்து வருகிறார். அவர் 1989 ல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.

சீனா அவரை ஒரு பிரிவினை வாதி என்று குற்றம் சாட்டுகிறது, ஆனால் அவர், தனது தாயகத்திற்கு உண்மையான சுயாட்சி கிடைக்க வேண்டும் என்று மட்டுமே விரும்புவதாக கூறுகிறார்.

Trending News