விமானத்தை பயன்படுத்திய முதல் மனிதன் இலங்கை வேந்தன் ராவணன்: இலங்கை அரசு

இராவணன் உலகின் முதல் பறக்கும் மனிதன் என்பதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளதாக இலங்கை கூறுகிறது

Last Updated : Jul 20, 2020, 10:21 PM IST
  • இலங்கை அரசன் ராவணன் தலை சிறந்த அறிவாளி எனவும் அவர் சீதையை கடத்தி செல்ல இந்தியா செல்லவில்லை எனவும் இலங்கை கூறுகிறது.
  • இலங்கை வேந்தன் தொடர்பான ஆதாரங்களை ஆவணப்படுத்த, இலங்கை அரசு மக்கள் உதவியை நாடியுள்ளது.
  • சிறிது நாட்களுக்கு முன்னால் நேபாள அரசு ராமரை சொந்தம் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
விமானத்தை பயன்படுத்திய முதல் மனிதன் இலங்கை வேந்தன் ராவணன்: இலங்கை அரசு  title=

இராவணன் உலகின் முதல் பறக்கும் மனிதன் என்பதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளதாக இலங்கை கூறுகிறது. இலங்கை குடிமக்கள் இதற்கான ஆராய்ச்சியில் உதவ வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு கோரியுள்ளது.

இராமாயணத்தில் வரும் இராவணன்,  இலங்கையிலிருந்து இந்தியா செல்லவும், அங்கிருந்து திரும்பி வரவும் 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக, விமானத்தை பயன்படுத்தியதாக இலங்கை அரசு கூறுகிறது.

இதை ஆவணப்படுத்த வதற்காக, இலக்கியங்கள் மற்றும் பிற வகையில் கிடைக்கும் தகவல்களை வழங்கி பொதுமக்கள் உதவ வேண்டும் என்று இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

ALSO READ | TikTok செயலிக்கு நீடிக்கும் பிரச்சனை… அடுத்த தடை ஆஸ்திரேலியாவா ..!!!

 

5000 ஆண்டுகளுக்கு முன்னதாக, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இலங்கை மன்னன் எவ்வாறு இதுபோன்ற மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிந்தது என்பதை ஆராய இலங்கை அரசு விரும்புகிறது.

இலங்கை அரசன் ராவணன் தலை சிறந்த அறிவாளி என்றும், அவர் உலகின் முதல் பறக்கும் மனிதன் என்றும் விமான போக்குவரத்து அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் தெரிவித்தார். இது கதையல்ல உண்மை, இது தொடர்பாக விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என்றார். அடுத்த 5 ஆண்டுகளில் இதை எங்களால் நிரூபிக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

எனினும், ராவணன் சீதையை கடத்திச் செல்வதற்காக இந்தியா செல்லவில்லை என்றும், அது இந்திய தரப்பில் கூறப்படும் கதை என்றும் அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் குறிப்பிட்டார்.

சில நாட்களுக்கு முன்னால், நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ராமர் இந்தியர் அல்ல, அவர் ஒரு நேபாளி என்றும், உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது என்று உரிமை கொண்டாடி சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.

ALSO READ | எல்லை பதற்றத்திற்கு இடையில் இந்திய-அமெரிக்க கடற்படைகள் அந்தமானில் பயிற்சி…!!!

 

அதன்பின் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அவசரம் அவசரமாக, இந்தியாவின் கலாச்சார பெருமை, உலகம் அறிந்த ஒன்று என்றும், பிரதமர் ஒளியின் இந்த கருத்துக்கு பின்னால், அரசியல் காரணம் எதுவும் இல்லை என்றும், யாரையும் புண்படுத்தும் நோக்கில் அது வெளியிடவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி, இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை குறைக்க முயன்றது.

Trending News