மகிந்த ராஜபக்ச இங்குதான் உள்ளார், நலமாக உள்ளார்: இலங்கை பாதுகாப்பு செயலாளர்

Sri Lanka Crisis: இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, திருகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக, அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் புதன்கிழமை தெரிவித்ததாக, செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 11, 2022, 03:34 PM IST
  • மகிந்த ராஜபக்ச பாதுகாப்பாக உள்ளார்: இலங்கை பாதுகாப்புச்செயலர்.
  • இலங்கையில் வலுக்கிறது போராட்டம்.
  • மோதல்களில் இதுவரை குறைந்தது எட்டு பேர் இறந்துள்ளனர், 220 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மகிந்த ராஜபக்ச இங்குதான் உள்ளார், நலமாக உள்ளார்: இலங்கை பாதுகாப்பு செயலாளர் title=

கொழும்பு: இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, திருகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக, அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் புதன்கிழமை தெரிவித்ததாக, செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. 

ராஜபக்ச மர்மமான முறையில் பாதுகாப்பு வீரர்களால் அழைத்துச்செல்லப்பட்டதை அடுத்து, அவர் எங்கே உள்ளார் என்பது குறித்து பல வித வதந்திகள் பரவத் தொடங்கின.  பாதுகாப்புச் செயலரின் கூற்று இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

முன்னதாக, அவரைத் தேடி அவரது டெம்பிள் ட்ரீஸ் அலுவலகம் மற்றும் வதிவிடத்தில் வன்முறைக் கூட்டம் குவிந்தது. பாதுகாப்புச் செயலரின் கூற்றையடுத்து, திருகோணமலை கடற்படை தளம் அருகே மக்கள் கூட்டம் கூடியது. 

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக பெரிய அளவிலான கொந்தளிப்பு இருந்து வருகிறது. திங்களன்று ராஜபக்ச ராஜினாமாவை அறிவித்தாலும், கொழும்பு மற்றும் பிற நகரங்களின் தெருக்களில் அவரது ஆதரவாளர்களுடன் வன்முறைப் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது. இதன் விளைவாக எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

ராஜபக்சவின் பரம்பரை வீடு எரிக்கப்பட்டது. அமைச்சர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன

தங்காலையில் ராஜபக்ச சகோதரர்களின் தந்தையான டி.ஏ.ராஜபக்ஷவின் உருவபொம்மை சிலரால் உடைக்கப்பட்ட நிலையில், அம்பாந்தோட்டாவில் ராஜபக்சவின் பாரம்பரிய வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. இலங்கை அதிகாரிகளால் பகிரப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மோதல்களில் இதுவரை குறைந்தது எட்டு பேர் இறந்துள்ளனர், 220 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | இலங்கையிலிருந்து தப்பித்த சிறை கைதிகள் - தமிழகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை..! 

மேலும், 47 வாகனங்கள் மற்றும் 38 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதுடன், 41 வாகனங்களும், 65 வீடுகளும் போராட்டக்காரர்களால் சேதமடைந்துள்ளன. 18 முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் போராட்ட கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும், துணை சபாநாயகர் உட்பட 14 அலுவலக பணியாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் வந்த நிலையில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் அவர் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையை விட்டு வெளியேறக்கூடாது என்பதற்காக விமான நிலையம் அருகே சோதனைச் சாவடிகளை அமைத்தனர். முன்னதாக, செவ்வாய்கிழமை, நாட்டின் உயர்மட்ட சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரியும், இலங்கைக்கு வெளியே எந்த ஒரு உயர்மட்ட நபரும் சட்டவிரோதமாக அழைத்துச்செல்லப்படவில்லை என்று கூறினார்.

இதற்கிடையில், இலங்கையில் இன்று வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தால் நாளை ஊரடங்குச் சட்டம்  தளர்த்தப்படும் என இலங்கை பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | கலவரத்தை அடக்க இலங்கை விரைகிறதா இந்திய ராணுவம்? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News