ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்: ட்விட்டரின் தலைமைப் பொறுப்பை ஏற்ற உடனேயே, எலான் மஸ்க் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். ஜெனரல் மோட்டார்ஸ் (ஜிஎம்) ட்விட்டரில் பணம் செலுத்தும் விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது. எலான் மஸ்க்கின் கீழ் இனி செயல்படவிருக்கும் மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டர் எந்த திசையில் செல்லும் என்பதை வாகன உற்பத்தி நிறுவனமான ஜிஎம் முதலில் கண்காணிக்க விரும்புவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விளம்பர பட்ஜெட்டில் எத்தனை சதவீதம் ட்விட்டருக்கு செல்கிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ட்விட்டரின் புதிய நிர்வாகத்தின் கீழ், அந்த இயங்குதளத்தின் திசையைப் புரிந்து கொள்ள நாங்கள் ட்விட்டரில் இணைகிறோம் என்று நிறுவனம் டெக் க்ரஞ்ச்சிடம் தெரிவித்துள்ளது.
'எங்கள் வாடிக்கையாளர் சேவையுடன் பேச்சுக்கள் ட்விட்டரில் தொடரும்'
வெள்ளிக்கிழமை இரவு, நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், ‘ஊடகத் தளத்தின் வழக்கமான வணிக முறைக்கு குறிப்பிடத்தக்க மாற்றமாக, எங்கள் கட்டண விளம்பரத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம்’ என்றார். ட்விட்டரில் எங்கள் வாடிக்கையாளர் சேவையுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வோம். Ford, GM, Stelantis, Porsche, VW மற்றும் Volvo போன்ற நிறுவனங்களுடன் Rivian போன்ற புதிய நிறுவனங்களும் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளன.
மேலும் படிக்க | ₹3.5 லட்சம் கோடி... $44 பில்லியன் டாலர்... பணத்தை எப்படி திரட்டினார் எலான் மஸ்க்!
ஒரு கடிதம் (ஓப்பன் லெட்டர்) மூலம் ட்விட்டரில் விளம்பரங்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தைப் போக்க மஸ்க் முயன்றதை அடுத்து, ட்விட்டரில் பணம் செலுத்தும் விளம்பரங்களில் இருந்து விலகி இருக்க ஜெனரல் மோட்டார்ஸ் முடிவெடுத்தது.
தனது கடிதத்தில் மஸ்க் கூறியது என்ன?
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி, "நான் ஏன் ட்விட்டரை வாங்கினேன் மற்றும் விளம்பரத்தைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது பற்றி நிறைய ஊகங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தவறானவை. உலகின் மிகவும் மரியாதைக்குரிய விளம்பரத் தளமாக இந்த தளம் இருக்க வேண்டும்” என்று அவர் விளம்பரதாரர்களிடம் கூறினார்.
அந்த கடிதத்தில், மஸ்க், ட்விட்டர், எந்த விளைவுகளும் இல்லாமல் எதை வேண்டுமானாலும் கூறலாம் என்பது போன்ற, அனைவருக்கும் இலவசமான தளமாக (ஃப்ரீ ஃபார் ஆல்) மாற முடியாது. ட்விட்டர் பயனாளர்களின் தேவைக்கேற்ப விளம்பரங்களைக் காட்டுவது அவசியம் என்று அவர் தெரிவித்தார். குறைந்த தேவை கொண்ட விளம்பரங்கள் ஸ்பேம் ஆக இருக்கும், ஆனால் மிகவும் பொருத்தமான விளம்பரங்கள் உண்மையான உள்ளடக்கம் என்று மஸ்க் கூறினார்.
மேலும் படிக்க | கூண்டை விட்டு பறந்த பறவை... டிவிட்டரை கைப்பற்றினார் எலான் மஸ்க்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ