கதவுக்கு பின்க் நிற பெய்ண்ட்... லட்சக்கணக்கில் அபராதம் - ஏன் தெரியுமா?

பின்க் நிறத்தில் இருக்கும் வாசல் கதவை, வெள்ளை நிறத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் ரூ. 19 லட்சம் அபராதமாக விதிக்கப்படும் என ஸ்காட்லாந்தின் நகர சபை, பெண் ஒருவருக்கு உத்தரவிட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 31, 2022, 04:36 PM IST
  • அந்த பெண் கடந்தாண்டு வாசல் கதவுக்கு பின்க் நிற பெய்ண்டை அடித்துள்ளார்.
  • பின்க் நிற கதவு இணையத்தில் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
கதவுக்கு பின்க் நிற பெய்ண்ட்... லட்சக்கணக்கில் அபராதம் - ஏன் தெரியுமா? title=

ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் வசித்து வருபவர் மிரண்டா டிக்சன். 48 வயதான இந்த பெண்மணி, கடந்தாண்டு தனது வீட்டின் வாசல் கதவிற்கு பின்க் நிறத்தில் பெய்ண்ட் அடித்துள்ளார். ஆனால், இதற்கு நகர சபை சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, வெள்ளை நிறத்தில் கதவை பெய்ண்ட் அடிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.  

இரண்டு பிள்ளைகளின் தாயான மிரண்டா, 2019ஆம் ஆண்டு தனது பெற்றோரிடம் இருந்து அந்த வீட்டைப் பெற்று, இரண்டாண்டு காலமாக சீரமைத்துள்ளார். அதில், ஒரு பினிஷிங் டச்சாக தனது வாசல் கதவிற்கு பின் நிறத்தில் பெய்ண்ட் அடித்துள்ளார். மேலும், இந்த கதவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் அந்த கதவை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டதால், சமூக வலைதளங்களிலும் அந்த கதவு பிரபலமானது. 

அந்த கதவு  குறித்து மிரண்டா கூறுகையில்,"இங்கிலாந்தில் பிரிஸ்டால், நாட்டிங் ஹில், ஹரோகேட் போன்ற நகரங்கள் முழுவதும் பளீச்சென இருக்கும். எனவே, எனது வீட்டிற்கும் அடர்த்தியான நிறத்தில் பெய்ண்ட் அடித்தேன். வீட்டிற்கு வந்து கதவை பார்க்கும்போது, இனம் புரியாத மகிழ்ச்சியை தருகிறது. அதனால் நான் பெருமைப்படுகிறேன்" என்றார். 

மேலும் படிக்க | 'சாப்பாடு சூப்பர்... நானே சாப்பிட்டேன்' - மெசேஜ் போட்ட டெலிவரி பாய்... கடுப்பான கஸ்டமர்!

ஆனால், எடின்பர்க் நகர சபை புது நிறத்தை அடிக்க கூடாது எனவும் வெள்ளை நிறத்திற்கு மாற்றும்படி கூறியுள்ளது. ஏனென்றால், நகர சபையின் விதிப்படி வாசல் கதவின் நிறம் பளீச்சென இருக்கக் கூடாது என கூறப்படுகிறது. அப்படி நிறம் மாற்றவில்லை என்றால், 20 ஆயிரம் பவுண்ட் (சுமார் 19 லட்ச ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதை மிரண்டா மறுத்துள்ளார். அதே நகரில் பல கட்டடங்கள் அடர்த்தியான நிறத்தில் கதவுகளை வைத்துள்ளன என்றும், அடர் சிவப்பு நிறத்தில் கூட கதவு இருக்கிறது என்றும் மிரண்டா தெரிவித்துள்ளார். 

"ஜார்ஜியன் கலாச்சாரத்தில் பின்க் நிறம் மிகவும் போற்றப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் ஜன்னல்களுக்கு கருப்பு அல்லது கிரே நிறமும், வாசல் கதவுகளுக்கு வேறு நிறமும் இருக்கும். எனது கதவை பலரும் ரசிக்கிறார்கள். அதனால், மகிழ்ச்சியாக உணர்வதாகவும் என்னிடம் கூறுகின்றனர். எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி" என மிரண்டா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

மேலும் படிக்க | Smiling Sun: சிரிக்கும் சூரியன்! வைரலாகும் நாசாவின் புகைப்படம்! பூமியை பார்த்து லுக் விடும் கதிரவன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News