26 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உடன் பயணித்த ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது!
சிரியாவின் கடலோர நகரமான லடாகியினுக்கு அருகே ஹம்மிம் தளத்திற்கு அருகே தரையிறங்க முற்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொழில்நுட்ப கோளாரு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணை தெரவிக்கின்றது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி., 26 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் கொண்டு பயணித்த ரஷ்ய விமானம் ஒன்று சிரியா பகுதியில் தரையிறங்க முற்படுகையில் விபத்துக்குள்ளானது என தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Russia's Defense Ministry says a Russian cargo plane has crashed in Syria, killing 32 people onboard, reports The Associated Press.
— ANI (@ANI) March 6, 2018
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹிமிம்மி-லிருந்து வெளியேற முயற்சித்தப்போது ஒரு சுகோய் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பணியாளர்கள் பலியாகினர். அதன் பின்னர் நிகழும் இரண்டாவது விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
(இச்சம்பவம் தொடர்பான மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன)