ரஷ்ய அடுக்குமாடி கட்டடத்தில் போர் விமானம் மோதி விபத்து!

போர் விமானம் ஒன்று, ரஷ்யாவின் ஐஸ்க் (Yesyk) நகர அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 17, 2022, 11:02 PM IST
  • போர் விமான விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
  • விபத்து நடந்த நகரம் உக்ரைனுக்கு அருகில் உள்ளது.
  • விமானிகள் விபத்துக்கு முன்னரே வெளியேறிவிட்டார்கள் என தகவல்.
ரஷ்ய அடுக்குமாடி கட்டடத்தில் போர் விமானம் மோதி விபத்து! title=

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஐஸ்க் (Yesyk) நகரில், ரஷ்ய போர் விமானம் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. விமானம் மோதிய அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து பெரும் புகை எழுந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை ஐஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் உறுதிப்படுத்தியுள்ளார். ஐஸ்க், உக்ரைன் நாட்டிற்கு அருகில் உள்ள ரஷ்ய நகரம் என கூறப்படுகிறது.

விபத்தை ஏற்படுத்திய போர் விமானத்தின், விமானிகள் விபத்திற்கு முன்னரே வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து கவர்னர் வெனியமின் கோண்ட்ராடியேவ் கூறுகையில், விபத்துக்குள்ளானது சுகோய் சு-34 வகை, சூப்பர்சோனிக் போர் விமானம் என்றார்.

ராணுவ விமான நிலையத்தில் இருந்து பயிற்சியாக புறப்பட்ட இந்த விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அதன் என்ஜினில் தீப்பிடித்ததால் விபத்து நேர்ந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், இதுகுறித்த உறுதிப்படுத்தப்படாத புகைப்படங்களும், காணொலிகள் சமூக வலைதளங்களில் காணக்கிடைக்கின்றன. தற்போது, ரஷ்யா, உக்ரைன் மீது போர் தாக்குதல் தொடுத்து வரும் இந்த சூழலில், இந்த போர் விமான விபத்தானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்தில் எத்தனை பேர் காயமடைந்துள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க | அணு குண்டுவீச தயாராகிறதா ரஷ்யா... அதிகரிக்கும் பதற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News