உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ரஷ்யா, QUAD நாடுகள் கூறுவது என்ன!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரை நிறுத்த பல நாடுகள் குரல் எழுப்பியுள்ளன. இதில் இந்தியாவும் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 21, 2022, 05:44 PM IST
  • ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றிய விவாதம்
  • இந்தியாவின் நிலைப்பாட்டை 'குவாட்' நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன
  • இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யாவும் பாராட்டியுள்ளது
உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ரஷ்யா, QUAD நாடுகள் கூறுவது என்ன! title=

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரை நிறுத்த பல நாடுகள் குரல் எழுப்பியுள்ளன. இதில் இந்தியாவும் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. 

இந்தியா ரஷ்யா உக்ரைனில் நடந்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 'குவாட்' நாடுகளின் கூட்டத்திற்கு முன்னதாக ஆஸ்திரேலியா இந்த விஷயங்களை கூறியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை 'குவாட்' நாடுகள் ஏற்றுக்கொண்டதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் அடங்கிய 'QUAD' குழுவில் இடம் பெற்றுள்ளன.

திங்களன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையிலான உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ'ஃபாரல்,  இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்தார்.

மேலும் படிக்க | துரோகிகள் கொசுக்களை போல் நசுக்கப்படுவார்கள் என எச்சரிக்கும் ரஷ்ய அதிபர் புடின்

உக்ரைனில் நடந்து வரும் ரஷ்ய தாக்குதல்கள் மற்றும்  இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை சலுகை விலையில் வாங்குவது க தொடர்பாக மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வரும் அதிருப்தி குறித்தும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் ஆஸ்திரேலிய தூதரிடம்  கேள்வி எழுப்பப்பட்டது. இந்தியாவின் நிலைப்பாட்டை குவாட் நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்றார். 

ஒவ்வொரு நாட்டிற்கும் இருதரப்பு உறவு இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிரதமர் மோடி தொடர்ந்து இரு தரப்பினரிடம்  இருக்கு உறவை பயன்படுத்தி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது தெளிவாகிறது.

மேலும் படிக்க | ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்: அமரிக்கா கூறுவது என்ன!

மேலும், உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்கள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு, 1957-ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஏற்றுக்கொண்ட கொள்கையை கடைபிடிப்பதாக தெரிகிறது. தற்போதை  போரை தீர்ப்பதக்கான வாய்ப்பை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

உக்ரைனில் நடப்பதை இந்தியா ஆதரிப்பதாக யாரும் குற்றம் சாட்டவில்லை. 65 ஆண்டுகளுக்கு முன்பு நேரு வகுத்த கொள்கையில் இந்தியா என்ன செய்ய முயல்கிறது என்று தோன்றுகிறது என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக இந்தியா பேசவில்லை. மாறாக,  இந்தியா நடுநிலை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தது. இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யாவும் பாராட்டியுள்ளது. குவாட் குழுவும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பிறகு, இந்த முன்னணியில் அது ஒரு பெரிய இராஜதந்திர வெற்றியைப் பெற்றுள்ளது என்பது தெளிவாகிறது. 

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News