இந்தியாவில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைப் போல, உலகின் மிக சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவிலும், தொற்று பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. மார்ச் 8 -க்குப் பிறகு, 4 மாதங்கள் கழித்து சென்ற மாத இறுதியில் முதல் முறையாக அமெரிக்காவில் ஒரு நாளில் 1 லட்சத்து 8 ஆயிரம் புதிய தொற்று பாதிப்புகள் பதிவானது.
தற்போது, அமெரிக்காவில் (America) சராசரியாக தினசரி 63 ஆயிரம் புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன. கொரோனாவின் இந்த புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை அமெரிக்காவின் கவலையை அதிகரித்துள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கையில் திடீரென அதிகரித்துள்ளது, அமெரிக்காவில் கொரோனாவின் நான்காவது அலை தொடங்கி விட்டதை குறிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஏனெனில், கடந்த இரண்டு வாரங்களில், தொற்று பாதிப்புகள் 170 சதவீதம் அதிகரித்துள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் அமெரிக்கா உலகின் மூன்றாவது பெரிய நாடு. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை சுமார் 33 கோடி ஆகும், இதில் 17 கோடி மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்கள்.
ALSO READ | NASA - SpaceX ஒப்பந்தம்: செவ்வாய்க்கு பிறகு வியாழன் கிரகத்தை குறி வைக்கும் நாசா
அமெரிக்கா தனது மக்கள் தொகையில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போட்ட நிலையிலும், அங்கு கொரோனாவின் நான்காவது அலை ஏற்பட்டுள்ளது என்பதற்கான எனவே இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன, முதல் காரணம் அரசியல் மற்றும் இரண்டாவது காரணம் சமூகம்.
இதில் உள்ள அரசியல் என்னவென்றால், அமெரிக்காவில் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்ற முடிவு அவசரமாக எடுக்கப்பட்டதாகவும், அதன் பின்னணியில் தலைவர்கள் மற்றும் குடிமக்களிடமிருந்து நிறைய அழுத்தம் வந்தது தான் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டவர்கள் மாஸ்க் அணிய வேண்டிய அவசியமில்லை என்ற முடிவு அதற்கான உறுதியான அறிவியல் அடிப்படை இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது
முன்னதாக, சென்ற தேர்தலின் போது, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மாஸ்க் அணிய தேவையில்லை என கூறிய போது, ஜோ பிடன் , தான் அதிபர் ஆனவுடன் அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்குவேன் என்று உறுதியளித்தார். ஆனால் ஜோ பிடன் பல இடங்களில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என கூறப்பட்டு, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என கூறி விட்டது. ஆனால் இப்போது இந்த முடிவு மிகப் பெரிய தவறு என்று அமெரிக்கா நம்புகிறது .
தடுப்பூசி போடப்பட்டவர்கள் முகமூடி அணிவது கட்டாயமாக்குவதை அமெரிக்க அரசு பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பவுசி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நான்காவது கொரோனா அலைக்கு இரண்டாவது காரணம் சமூகம். உண்மையில், அமெரிக்கா அதன் மக்கள் தொகையில் சுமார் 50 சதவீதத்திற்கு தடுப்பூசி போட்டிருந்தாலும், அங்குள்ள பலர் தடுப்பூசியை போட விரும்பவில்லை.
ALSO READ | Alcatraz Prison: உலகின் பயங்கரமான, மர்மமான சிறைச்சாலை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR