Rashi Parivartan on Russia: ரஷ்யாவின் பொருளாதாரத்தை பாழாக்கும் கிரகங்களின் ராசி மாற்றம்

கிரக இயக்கத்தின் விளைவால் உலகின் 11வது பெரிய பொருளாதாரம் கொண்ட ரஷ்யா எப்படி இருக்கும். சொல்லிக்கொள்வது போல் இல்லை என்கிறது கிரகங்களின் நிலைமை 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 16, 2022, 04:55 PM IST
  • கிரகங்களின் தாக்கமும் நாடுகளின் பொருளாதாரமும்
  • ராசி மாறும் கிரகங்களால் ரஷ்யாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும்
  • ரஷ்யாவின் பொருளாதரம் உலக பொருளாதாரத்தை பாதிக்குமா?
Rashi Parivartan on Russia: ரஷ்யாவின் பொருளாதாரத்தை பாழாக்கும் கிரகங்களின் ராசி மாற்றம் title=

புதுடெல்லி: ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் திடீரென உலகம் முன் ஒரு புதிய நெருக்கடியை உருவாக்கியது, இது பல வழிகளில் எதிர்பாராதது மற்றும் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்போதைய கிரகங்களின் மாற்றம் ரஷ்யாவின் பொருளாதாரத்தை பாதிக்குமா?

ஆச்சார்யா டாக்டர் விக்ரமாதித்யா ரஷ்யாவின் பொருளாதாரத்தின் மீதான கிரகங்களின் கோசார பரிவர்த்தனையை கணித்து சொல்கிறார். இந்திய ஜோதிடத்தின்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலகம் முழுவதும் பதற்றமான காலகட்டமாகவே இருக்கும் என்கிறார் ஆச்ச்சார்யா விக்ரமாதித்யா.

நண்பன் எப்போது எதிரியாகிறான் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, நாடுகளுக்கும் பொருந்துவது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சனியின் பலம் காரணமாக ரஷ்யா இன்னும் ஆக்ரோஷமான அணுகுமுறையையே பின்பற்றும் என்றும், இது உக்ரைனுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்றும் கிரகங்கள் சொல்கின்றன.

மேலும் படிக்க | உக்ரைக்கு $800 மில்லியன் இராணுவ உதவி; அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு

உக்ரைனின் புதன் பலவீனமானதால் இழப்பு
ரஷ்யா-உக்ரைன் போரில் அமெரிக்காவின் பங்கு ராகுவைப் போன்றது, உக்ரைனுக்கு அருகில் வரும் அமெரிக்கா,அதை அழிவின் பாதையில் கொண்டு செல்கிறது. 

உக்ரைன் அதிபர் ஜெலெஸ்கியின் ஜாதகத்தில் பலவீனமான புதன் இருப்பதால், அமெரிக்க இராஜதந்திரத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எல்லாமே அழிந்துவிட்ட நிலையில், இன்று உக்ரைன் தனது இருப்பைக் காப்பாற்ற யாராவது உதவுவார்களா என்று எதிர்பார்க்கிறது. ஆனால் ரஷ்யாவின் மீதான பயத்தால் உதவுவதற்கு எந்த நாடும் முன் வருவதில்லை.

மேலும் படிக்க | India - US 2+2 Dialogue: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்; உறுதியாக பேசிய இந்தியா

கிரகங்களின் பிற்போக்கு இயக்கத்தால் ரஷ்யா அழிந்து வருகிறது
ரஷ்யாவும் தன் கைகளாலேயே தன்னை அழித்துக் கொள்கிறது. உக்ரைனுடன் ரஷ்யா கடந்த 45 நாட்களாக போரில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் போரால் ரஷ்யாவுக்கும் பாதிப்பு இருக்கிறது. சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பிறகு ரஷ்யா ஒரு சக்திவாய்ந்த நாடாக மாற முப்பது ஆண்டுகள் ஆனது.

ஆனால் இந்தப் போரினால் எழும் சூழல் ரஷ்யாவிற்கும் நல்லதல்ல. இந்தப் போர் இன்னும் சில நாட்கள் நீடித்தால் ரஷ்யாவின் பொருளாதாரம் நாசமாகிவிடும்.

ஜாதகத்தில் சனி, செவ்வாய் மற்றும் ராகு உருவாகும் போது, ​​அந்த நபர் அனைத்தையும் இழக்கிறார். இந்த நிலை தற்போது ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ளது. தனது வலிமை மீதான அதீத நம்பிக்கையின் காரணமாக, ரஷ்யா தன்னைத்தானே அழித்துக்கொள்ள முனைகிறது.

மேலும் படிக்க | உக்ரைன் சமாதானப் பேச்சுக்கள் முட்டுச்சந்தை எட்டியுள்ளது: விளாடிமிர் புடின்

ஜோதிடத்தின் பார்வையில் ரஷ்யாவுக்கு எவ்வளவு சேதம்
ரஷ்யா உலகின் 11 வது பெரிய பொருளாதாரம் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியாளராக இருக்கிறது ரஷ்யா. ஆனால் அதன் கிரக நிலைகள் பாதகமாக இருப்பதால் பொருளாதாரத்தில் பின்னடைவை எதிர்கொள்ளும்.

ரஷ்யா இன்று ஐரோப்பாவின் ஆற்றல் தேவைகளின் 'உயிர்நாடியாக' உள்ளது, இருந்தாலும் போர் என்பது கத்தி போன்றது, பிடித்தவரையும் தாக்கும் தன்மை கொண்டது.

வெளிப்படையாகச் சொல்வதானால், பொருளாதாரப் போரின் விளைவுகள் மிகவும் வேதனையானவை, மேலும் அவை வாழ்வாதாரம், அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இழந்த அப்பாவி பொதுமக்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மேலும் படிக்க | தோனி செய்த அந்த மறக்க முடியாத விசயம்! நினைவிருக்கிறதா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News