வேக்ஸின் வரலைன்னா ராணுவ ஒப்பந்தமும் இருக்காது.. அமெரிக்காவை மிரட்டும் பிலிபைன்ஸ்.. !

'தடுப்பூசி கிடைக்கவில்லை என்றால் இராணுவ ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்' என பிலிப்பைன்ஸ் அதிபர் அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 28, 2020, 05:06 PM IST
  • கொரோனா தடுப்பூசியை விரைவில் வழங்க வேண்டும் என்ற பிலிபைன்ஸ் கூறியுள்ளது
  • இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ ஒப்பந்தம் உள்ளது.
  • ரோட்ரிகோ டூர்ட்டே வினோதமாக பேசுவதற்கு பெயர் பெற்ற தலைவர்களில் ஒருவர்.
வேக்ஸின் வரலைன்னா ராணுவ ஒப்பந்தமும் இருக்காது.. அமெரிக்காவை மிரட்டும் பிலிபைன்ஸ்.. ! title=

மணிலா: கொரோனா தடுப்பூசி தொடர்பாக பிலிப்பைன்ஸ் அமெரிக்காவை எச்சரித்துள்ளது. கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா வழங்காவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே  (Rodrigo Duterte) அமெரிக்காவை எச்சரித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில் அமெரிக்கா விரைவில் எங்களுக்கு ஒரு தடுப்பூசி வழங்கவில்லை என்றால்,  ராணுவ ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று டூர்ட்டே கூறினார்.

அமெரிக்காவுடனான (America) இராணுவ ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே ஒரு மிரட்டும் தொனியில் கூறினார். அமெரிக்கா விரைவில் 2 கோடி தடுப்பூசிகளை வழங்கவில்லை என்றால், அமெரிக்க இராணுவம் பிலிப்பைன்ஸை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.

ALSO READ | Snow Festival in China: மனதை கொள்ளை கொள்ளும் பனி சிற்பங்களை காணலாம்..!!!

 

சனிக்கிழமை ஒரு கூட்டத்தின் போது 'No Vaccine, No stay' என்று டூர்ட்டே கூறினார். அதாவது, அமெரிக்கா தடுப்பூசி கொடுக்கவில்லை என்றால், அதன் இராணுவம் பிலிப்பைன்ஸில் தங்க அனுமதிக்கப்படாது. அதிபர் டூர்ட்டே இந்த அறிக்கை குறித்து இதுவரை அமெரிக்காவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தத்தை ரத்து செய்ய அதிபர் டூர்ட்டே உத்தரவிட்டார், ஆனால் பின்னர் அதை 6 மாதங்களுக்கு பிறகு வாபஸ் பெற்றார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க வீரர்கள் பிலிப்பைன்ஸின் பிரதேசத்தில் இராணுவ பயிற்சிகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இது அவசர நிலை என்பதால், தடுப்பூசி வாங்குவதற்கான பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று பிலிபைன்ஸ் அதிபர் அதிகாரிகளிடம் கூறினார். 

கொரோனா தொற்றுநோய் (Corona Virus) பரவலை தொடர்ந்து, ஜூலை மாதம் முதல் பிலிப்பைன்ஸில் லாக்டவுன்  அமலில் உள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி பயன்பாடு தொடங்கிய பின்னர் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று பிலிபைன்ஸ் அதிபர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். பிலிப்பைன்ஸ் பிரிட்டனுடனும், தடுப்பூசி வாங்குவதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளது. ஆனால் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே அனைவருக்கும் தடுப்பூசி போட அதிக தடுப்பூசிகள் தேவை என்பதால், அதனை விரைவில் பெற வேண்டும் என விரும்புகிறார். எனவே இப்போது அவர் அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.

ரோட்ரிகோ டூர்ட்டே தனது வினோதமாக பேசுவதற்கு  பெயர் பெற்ற தலைவர்களில் ஒருவர். பிரேசில் அதிபரை போலவே, ரோட்ரிகோ டூர்ட்டே இதுவரை பல அபத்தமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். சில காலத்திற்கு முன்பு அவர் மாஸ்க் பற்றி ஒரு விசித்திரமான ஆலோசனையை வழங்கினார். மக்கள் மாஸ்குகளை பெட்ரோலினால் சுத்தம் செய்து கிருமிகளை நீக்க வேண்டும் என்று அவர் கூறினார். இருப்பினும், இது பெரும் சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, அதிபர் கேலியாக இதனை கூறினார் என அதிகாரிகள் ஒரு விளக்கத்தை அளித்து சமாளித்தனர்.

ALSO READ | அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்விக்கு பழி வாங்குகிறாரா டொனால்ட் ட்ரம்ப்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News