Fuel Price Reduced: பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டது

Pakistan Crisis: பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 15, 2022, 09:29 AM IST
  • ஐஎம்எப் கடனுக்காக எரிபொருள் விலைகளை உயர்த்திய பாகிஸ்தான்
  • பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.230.24
  • பாகிஸ்தானில் விலை குறைப்புக்கு பிறகு டீசல் விலை லிட்டருக்கு ரூ.236
Fuel Price Reduced: பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டது title=

Fuel Price Reduced in Pakistan:பாகிஸ்தான் அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தது அந்நாட்டு மக்களுக்கு ஆசுவாசம் அளித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் கடுமையான பணவீக்கத்தை சந்தித்து வரும் பாகிஸ்தான் மக்களுக்கு இது நல்ல செய்தியாக வந்துள்ளது. 

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நேற்று (2022, ஜூலை 14) அறிவித்தார்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.18.50 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.40.54 குறைக்கப்படுவதாக ஷாபாஸ் அறிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வருவதால் விலையை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரிபுதமன் சிங் மாலிக்: 1985 ஏர் இந்தியா விமான தாக்குதல் வழக்கு சந்தேக நபர் படுகொலை

அந்நிய செலாவணி இருப்பு பற்றாக்குறை
பாகிஸ்தான் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதன் வெளிநாட்டுக் கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட தீர்ந்து விட்டது என்றே கூறலாம்.

அந்நிய செலாவணி இருப்பு இல்லாவிட்டால், நாட்டிற்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்யமுடியாது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான பொருட்களை இறக்குமதி செய்வதற்காக பாகிஸ்தான் அரசு IMF-ல் கடன் வாங்க முயற்சிக்கிறது. 

பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதற்காக ஐஎம்எப் பல நிபந்தனைகளை போட்டது, அவற்றை ஏற்றுக் கொண்டு கடனை துரிதமாக வாங்க கடந்த ஒரு மாதமாக பாகிஸ்தான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், அந்நாடு, இதுவரை கடனை பெற முடியவில்லை.

மேலும் படிக்க | யுபிஐ மூலம் ஏடிஎம்-லிருந்து பணம் எடுக்கலாம், கார்ட் கூட தேவையில்லை

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவின் பேரில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது

கடந்த மாதம், சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவின் பேரில், பாகிஸ்தான் அரசு பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரத்தின் விலையை கடுமையாக உயர்த்தியது. இது தவிர பல பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. 

இது குறித்து பேசிய ஷாபாஸ் ஷெரீப், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், வேறு வழியில்லாததால், எண்ணெய் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆனால் இப்போது சர்வதேச அளவில் விலை குறைந்துள்லதால், எரிபொருட்களின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | Google Pay, PhonePe பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை! UPI-ல் நடக்கும் மோசடி!

இப்போது பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.230.24 ஆக இருக்கும்.ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் காரணமாக கடந்த 4 மாதங்களாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

அது உலகம் முழுவதையும் பாதித்தது. பெரும்பாலான நாடுகளில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. 

தற்போது நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பாகிஸ்தான் அரசு எரிபொருள் விலையை குறைத்துள்ளது. எனவே பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.230.24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.236 ஆகவும் குறைந்துள்ளது.

மேலும் படிக்க | UPI பேமெண்ட் மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Trending News