என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க! இந்தியப் பிரதமரின் காலில் விழுந்த பப்புவா கினியா பிரதமர்

PM Modi's visit to Papua New Guinea: பப்புவா நியூ கினியாவில் பிரதமர் மோடி: பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு, பப்புவா நியூ கினியா தனது பாரம்பரியத்தை மீறி முறைப்படி வரவேற்பு அளித்தது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 22, 2023, 04:26 PM IST
  • பப்புவா நியூ கினியாவில் பிரதமர் மோடி
  • தனது பாரம்பரியத்தை மீறி இந்திய பிரதமருக்கு வரவேற்பு அளித்த பப்புவா நியூ கினியா
  • பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கிய பப்புவா நியூ கினியா பிரதமர்
என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க! இந்தியப் பிரதமரின் காலில் விழுந்த பப்புவா கினியா பிரதமர் title=

பப்புவா நியூ கினியா: பிரதமர் மோடி தனது மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாவது கட்டமாக, ஜப்பானில் இருந்து பப்புவா நியூ கினியா சென்றடைந்தார். பப்புவா நியூ கினியாவுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்தினார். ஜப்பானில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில்  பங்கேற்ற பிறகு, பிரதமர் மோடி இந்த பயணத்தை மேற்கொண்டார்.

பிரதமர் மோடியின் காலில் விழுந்த பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மாரபே

ஞாயிற்றுக்கிழமை பப்புவா நியூ கினியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டில் பாரம்பரிய சிறப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மாரபே, விமான நிலையத்தில் அவரை அன்புடன் வரவேற்றதுடன், அவரது பாதங்களைத் தொட்டு வணங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகிறது.

வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் 

பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் பிரதமர் மோடியின் காலைத் தொடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுமட்டுமின்றி, பப்புவா நியூ கினியா தனது பழைய பாரம்பரியத்தை முறியடித்து, பிரதமர் மோடியை வரவேற்கிறது என்றும் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28 அன்று திறந்து வைப்பார்!

பொதுவாக, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வரும் எந்தத் தலைவரையும் பப்புவா நியூ கினியா முறையாக வரவேற்பதில்லை, ஆனால் விதிவிலக்காக, பிரதமர் மோடிக்கு இரவு நேரத்தில் வரவேற்பு வழங்கப்பட்டது. முதன்முறையாக தனது நாட்டிற்கு வரும் ஒரு இந்தியப் பிரதமரை பப்புவா நியூ கினியா பாரம்பரிய முறைப்படி வரவேற்றது.  

'நான் எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பேன்'
இந்த கவுரவத்தை எப்போதும் நினைவில் கொள்வேன் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அவர் ட்விட்டரில், 'பப்புவா நியூ கினியாவிற்கு வந்து சேர்ந்துவிட்டேன். விமான நிலையத்திற்கு வந்து என்னை வரவேற்ற பிரதமர் ஜேம்ஸ் மாரப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அன்பு மற்றும் மரியாதை மிகவும் சிறப்பு வாய்ந்தது, அதை நான் எப்போதும் நினைவில் கொள்கிறேன். எனது பயணத்தின் போது, இந்த மகத்தான நாட்டுடனான இந்தியாவின் உறவுகளை மேம்படுத்துவதை எதிர்நோக்குகிறேன், என இந்தியப் பிரதமர் டிவிட்டரில் பதிவிட்டார்.

பப்புவா நியூ கினியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரையும் பிரதமர் சந்தித்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 'பப்புவா நியூ கினியாவில் இருக்கும் இந்திய சமூகத்தினர் அதிக அளவில் வந்து பாசம் காட்டினர். மறக்க முடியாத வரவேற்புக்கு அவருக்கு நன்றி.

மேலும் படிக்க | ஜப்பானில் இந்தியப் பிரதமரின் சந்திப்புகள்! எதிர்காலத்திற்கான திட்டங்கள் என்ன?

'முக்கியமான பயணத்திற்கு அருமையான தொடக்கம்'
'முக்கியமான பயணத்தின் ஒரு பெரிய தொடக்கம்! பப்புவா நியூ கினியாவுக்கு இந்தியப் பிரதமர் மேற்கொண்ட முதல் பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி போர்ட் மோர்ஸ்பை சென்றடைந்தார். 19 துப்பாக்கிகள் முழங்க வரவேற்பு, சம்பிரதாய வரவேற்பு என அந்நாடு, இந்தியப் பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்றது. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை பிரதமர் ஜேம்ஸ் மாரப் சிறப்பு மரியாதையுடன் வரவேற்றார்’ என இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜப்பானில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரதமர் மோடி அதில் கலந்துக் கொண்ட பிறகு, இந்தியா-பசிபிக் தீவு ஒத்துழைப்புக்கான (எஃப்ஐபிஐசி) உச்சிமாநாட்டிற்கான 3வது மாநாட்டை திங்கட்கிழமை துவங்கி வைக்கிறார்.  

மேலும் படிக்க | மகாத்மா காந்தியின் சிலையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி! ஜப்பானில் இந்தியப் பிரதமர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News