பார்டிக்கு வர மறுத்த நடிகையை சுட்டுக் கொலை செய்த பரிதாபம்!

பாகிஸ்தானில் தனியார் பார்ட்டியில் கலந்து கொள்ள மறுத்த நடிகை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

Last Updated : Feb 5, 2018, 11:50 AM IST
பார்டிக்கு வர மறுத்த நடிகையை சுட்டுக் கொலை செய்த பரிதாபம்! title=

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தனியார் பார்ட்டியில் கலந்து கொள்ள மறுத்த நடிகை சுட்டுக் கொலை செய்துள்ளனர். பாகிஸ்தானின் கைபர் படுங்க்வா மாகாணத்தில் உள்ள மர்தானை சேர்ந்தவர் சும்பல் கான் (வயது-25). மேடை நாடகங்களில் நடித்து வந்த அவர் பாடும் திறைமையும் உடையவர். 

சும்பலின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத 3 பேர் அத்துமீறி நுழைந்து அவரை தனியார் பார்ட்டி ஒன்றில் கலந்து கொள்ளுமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் முடியாது என மறுத்துள்ளார். இதையடுத்து,  ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள்  அவரை பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

கண்மூடித்தனமாக சுட்டதில் சும்பல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் சும்பலின் தாத்தா மிர் பகதூரின் கண் முன்னால் நடந்துள்ளது.

சும்பல் கானை கொலை செய்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரி நயீம் கட்டாக்கை கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

Trending News