பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் வரும் 25-ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே இருப்பதால், பல்வேறு கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பிரசாரத்தின் போது நடத்தப்பட்ட இரண்டு தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் இதுவரை 133 பேர் பலியாகியுள்ளனர். 200-க்கு அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் அறிக்கை படி, இந்த தாக்குதல் பலுசிஸ்தானை சேர்ந்த அவாமி கட்சி (BAP) வேட்பாளர் சிராஜ் ரைசானி குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Death toll in Mastung blast in Balochistan rises to 128: Pakistan media
— ANI (@ANI) July 13, 2018
இந்த தாக்குதலில் சிராஜ் ரைசானி உடல் சிதறி பலியானார். இவர் பலுசிஸ்தான் மாகாணத்தின் முன்னால் முதல்வர் நவாப் அஸ்லம் ரைசானியின் சகோதரர் ஆவார். இவர் அவாமி கட்சி சார்பாக பிபி-35(BP-35) தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார். கடந்த ஜூலை 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாத தாக்குதலில் தனது 14 வயது மகனை (மஸ்டுங்) இழந்தார் சிராஜ் ரைசானி.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.