Pakistan Death Penalty: பாகிஸ்தானும் இந்தியாவை போல ஜனநாயக நாடு என்றாலும், அந்நாடு இஸ்லாமிய மதத்தின் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டதாகவும். அந்நாட்டில் இஸ்லாமிய மதம் சார்ந்து பல கடுமையான சட்டங்களும் உள்ளன.
ஒருபக்கம் இஸ்லாமியர்கள் மீது உலகம் முழுவதும் வெறுப்பு பரப்பப்பட்டு வரும் சூழலில், அடிப்படைவாதிகளின் செயல்பாடுகளும், கருத்துக்களும் அந்த வெறுப்பின் கூடுதலாக்க உதவும் என்பார்கள் அரசியல் வல்லுநர்கள். இஸ்லாமிய மதத்தை விமர்சித்தால் அங்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும்.
அந்த வகையில், பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த குற்றத்திற்காக கிறிஸ்துவ பெண்ணான ஆசியா பைபி என்பவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர் நாடு கடத்தப்பட்டார். அந்தளவிற்கு பாகிஸ்தானில் மத நிந்தனை என்பது பெரும் குற்றமாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | பாகிஸ்தானில் பதவியேற்று கொண்ட சீக்கிய அமைச்சர்... யார் அந்த ரமேஷ் சிங் அரோரா?
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் நீதிமன்றத்தில் கடந்த வாரம் இதுபோன்ற ஒரு வழக்கின் தீர்பு அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, மாணவர்கள் இருவர் இஸ்லாமியர்களின் இறை தூதர் என நம்பப்படும் நபிகள் நாயகம் குறித்து இழிவான வார்த்தைகள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்பியதாக வழக்கு நடந்துள்ளது. அந்த வழக்கில்தான் பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நபிகள் நாயகம் மற்றும் அவரது மனைவி குறித்து வாட்ஸ்அப் மூலம் இழிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்பிய குற்றத்திற்காக 22 வயது மாணவர் ஒருவருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த 17 வயதான மாணவருக்கு அவர் சிறுவன் என்ற காரணத்தினால் தூக்கு தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத நிந்தனை...
பாகிஸ்தானில் மதத்திற்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்தால் மரண தண்டனை கொடுக்கத்தக்க பெரிய குற்றமாக கருத்தப்படுகிறது. இருப்பினும், அரசு இதுவரை எவ்வித மரண தண்டனையையும் நிறைவேற்றியதில்லை. ஆனால், இதுபோன்று குற்றஞ்சாட்டப்பட்ட பல பேர் கோபங்கொண்ட கும்பல்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அந்த வகையில், இந்த மாணவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது, அது நிறைவேற்றப்படுமா என்பதும் கேள்விக்குறிதான்.
இந்த மாணவருக்கு எதிராக கடந்த 2022ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, லாகூரில் உள்ள பாகிஸ்தானின் ஃபெடரல் விசாரணை முகமையின் (FIA) சைபர் கிரைம் பிரிவு இவரை கைது செய்தது. இவருக்கு எதிராக கொடுக்கப்பட்ட அந்த புகாரில், மத நிந்தனை செய்து வெளியான புகைப்படங்களும், வீடியோக்களும் மூன்று வெவ்வேறு மொபைல்களில் இருந்து அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது. விசாரணை முகமை புகார் தெரிவித்தவர்களின் மொபைலை ஆராய்ந்ததில், அவர்களின் மூலம் அந்த அவதூறு புகைப்படங்கள் அனுப்பப்பட்டது தெரியவந்தது.
மேல்முறையீட்டுக்கு செல்லும் தந்தை
மேலும், இந்த இரு மாணவர்களின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடியபோது, குற்றஞ்சாட்டப்பட்ட இந்த இருவரும் தவறாக சித்திரிக்கப்பட்டு சிக்கவைத்திருப்பதாக கூறினர். மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்ட மாணவரின் தந்தை லாகூற் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 80க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்களின் வீடுகளும், 19 தேவாலயங்களும் வன்முறையால் சூரையாடப்பட்டன. இரண்டு கிறிஸ்துவ சகோதரர்கள் திருக்குறானை அவமதித்தாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த வன்முறை சம்பவங்கள் நடந்தேறின.
மேலும் படிக்க | 5ஆவது திருமணம் அதுவும் 92 வயதில்... யார் இந்த காதல் மன்னன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ