நாம் பார்க்கும் வேலைக்கான தகுந்த அங்கீகாரம் உரிய நேரத்தில், உரிய இடங்களில் சரியாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். மேலும், பொதுவாக கிடைக்க வேண்டிய மரியாதையிலும், முக்கியத்துவத்திலும் கூட எந்தவித சமரசத்தையும் ஏற்காத மனப்பான்மையையே எல்லோரும் வைத்துள்ளனர்.
உதாரணத்திற்கு, முன்பெல்லாம் கல்யாண பத்திரிகைகளில் தனது பெயர் இல்லை என்று ஆரம்பித்த பிரச்னைகள், தற்போது வாட்ஸ்அப்பில் தனது பிறந்தநாளுக்கு ஸ்டேட்டஸ் போடவில்லை என்ற ரகத்திற்கு வந்துவிட்டது. இதுமட்டுமில்லாமல், ஒரு முக்கியமான நபர், ஒரு முக்கியமான இடத்தில் ஒருவரின் பெயரை குறிப்பிடாமல் விட்டுவிட்டால் அவர் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பதை நீங்களும் கண்கூடாக பார்த்திருப்பீர்கள்.
அதுபோன்றுதான், அமெரிக்காவின் ஜார்ஜியாவில் காவல்துறையினர் தங்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் பதிவிட்ட 'மிகவும் தேடப்படும் குற்றவாளிகள்' என்ற பட்டியலில் தனது பெயர் இல்லை என்று ஒரு குற்றவாளி கமெண்ட் செய்ததால், அவருக்கு ஏற்பட்ட விளைவு இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க | அதிர்ச்சி வீடியோ : 1 வயது குழந்தையை அப்படியே முழுங்கிய முதலை... தந்தையும் படுகாயம்!
அதாவது, ராக்டேல் கவுண்ட் செரிஃப் அலுவலகம் தனது பேஸ்புக் பக்கத்தில், மிகவும் தேடப்படும் முதல் 10 குற்றவாளிகளின் பட்டியலை அவர்களின் புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தது. அந்த பதிவில், கிறிஸ்டோபர் ஸ்பால்டிங் என்பவர்,"இதில் நான் எங்கே" என்று தொனியில் பதிவிட்டிருந்தார்.
இதை பார்த்த அதிகாரிகள், "நீங்கள் சொல்வதும் சரிதான். உங்கள் மீதும் இரண்டு பிடிவாரண்ட்கள் இருக்கின்றன. உங்களை பிடிக்க புறப்பட்டுவிட்டோம்" என்று பதிலளித்திருந்தனர். தொடர்ந்து, கிறிஸ்டோபரை அதிகாரிகள் கைது செய்தனர்.
கிறிஸ்டோபர் மீது சில விதிமீறல் வழக்குகள்தான் உள்ளன. அதிகாரிகள் வெளியிட்ட பட்டியலில் இருப்பவர்கள் கொலை, ஆயுதமேந்திய கொள்ளை, மோசமான தாக்குதல் மற்றும் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்கள். அதனால்தான் கிறிஸ்டோபர் பெயர் அதில் இல்லை. தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் தனது பெயர் இல்லாததை கண்டு வேடிக்கையாக கிறிஸ்டோபர் போட்ட கமெண்ட், அவரை சிறைக்கு அனுப்பிய இந்த சம்பவம் இணையத்தில் பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
மேலும் படிக்க | ஜோடியுடன் ஜாலியாக வாழும் உலகின் மிக வயதான ஆமை... எத்தனை வயது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ