Study: ஆண்குறிக்கும் மூக்கு மற்றும் பாதத்திற்கும் என்ன தொடர்பு? அளவு தான்

Ulsan University Hospital in South Korea Study: பெரிய பாதங்களைக் கொண்ட ஆண்களுக்கு ஆண்குறியின் சுற்றளவு அகலமாக இருக்கும், மூக்கின் அளவு ஆண்குறியின் அளவை பெரும்பாலும் முடிவு செய்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 24, 2023, 12:32 PM IST
  • ஆண்களின் மூக்கு பாதம் மற்றும் ஆணுறுப்புக்கு இடையிலான ஒற்றுமை
  • டெஸ்டோஸ்டிரோனின் முக்கிய பங்கு
  • ஆண் குழந்தைகளின் மூக்கு மற்றும் பிறப்புறுப்பு
Study: ஆண்குறிக்கும் மூக்கு மற்றும் பாதத்திற்கும் என்ன தொடர்பு? அளவு தான் title=

ஆண்குறியின் அளவைப் பற்றிய ஒரு பழைய கட்டுக்கதையின் உண்மையை உறுதிப்படுத்தும் ஒரு புதிய ஆய்வின்படி, மூக்கின் அளவு ஆண்குறியின் அளவை பெரும்பாலும் முடிவு செய்கிறது என்று தென் கொரியாவில் உள்ள உல்சான் பல்கலைக்கழக மருத்துவமனையில்  மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி கூறுகிறது.

தற்போதைய ஆய்வு, இதே போன்ற முடிவுகளைக் கொண்ட 2021ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வை உறுதிப்படுத்துகிறது. தென்கொரிய உல்சான் பல்கலைக்கழக மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அண்மை ஆய்வு, Translational Andrology and Urology என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கும் மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பெரிய பாதங்களைக் கொண்ட ஆண்களுக்கு ஆண்குறியின் சுற்றளவு அகலமாக இருக்கும் என்பதாகும். 

ஆண்குறிக்கும் மூக்கு மற்றும் பாதத்திற்கும் என்ன தொடர்பு?
கருவில் இருக்கும் டெஸ்டோஸ்டிரோன் அதிக அளவில் வெளிப்படுவதே இதற்குக் காரணம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆண் குழந்தைகளின் மூக்கு மற்றும் பிறப்புறுப்பு இரண்டையும் உருவாக்குவதில் டெஸ்டோஸ்டிரோன் முக்கிய பங்கு வகிக்கிறது. கருப்பையில் உள்ள கருவில் உறுப்புகள் உருவாவதில் டெஸ்டோஸ்டிரோன் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேலும் படிக்க | கொரொனாவுக்கு எண்ட் கார்டு போடுவது எப்போது? சுகாதார அமைச்சகத்தின் கொரோனா அப்டேட்

"மூக்கின் அளவுக்கும் ஆணுறுப்பின் அளவுக்கும் தொடர்பு இருப்பதுபோலவே, ஆணுறுப்பின் சுற்றளவுக்கும் காலின் அளவுக்கும் தொடர்பு உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஹார்மோன் வெளிப்பாடு, இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சியை பாதிக்கிறது என்று இதற்கு முந்தைய ஆய்வுகளும் பரிந்துரைத்துள்ளன" என்று ஆராய்ச்சியாளர் டாக்டர் சுங்வூ ஹாங் தெரிவித்ததாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.  

ஆய்வு விவரம்
சமீபத்திய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் முப்பது வயதுடைய 1,160 ஆண்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், 30 வயது ஆண்களின் ஆணுறுப்பின் அளவுடன் அவர்களின் மூக்கின் அளவும் அளக்கப்பட்டு ஒப்பிடப்பட்டது.

இந்த ஆய்வு, ஆண்குறி மற்றும் மூக்கு அளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பைக் காட்டினாலும், இதற்கு மருத்துவ முக்கியத்துவம் பெரிய அளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஆண்குறியின் சராசரி அளவு பொதுவான அளவில் இருந்து வேறுபடவில்லை.

மேலும் படிக்க | ஆய்வகங்களில் குழந்தைகள் பிறக்க வைப்பதை சாத்தியப்படுத்தும் ஜப்பான் டெக்னாலஜி!

ஆண்ட்ரோஜன்கள், குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன் ஆகியவற்றுடன் ஆணுறுப்பின் வளர்ச்சி செயல்முறை மற்றும் முக அம்சங்களுக்கு இடையிலான ஒற்றுமை என்பதன் அடிப்படையில் இந்த கண்டுபிடிப்பு முக்கியமானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உடல் பருமனை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆணுறுப்பின் அளவு மற்றும் இனப்பெருக்க செயல்பாட்டை அதிகரிக்க முடியுமா என்பதை தீர்மானிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று ஆய்வு மேலும் கூறியது.

இதற்கு முன்னதாக, கியோட்டோ ப்ரிபெக்சுரல் யூனிவர்சிட்டி ஆஃப் மெடிசன் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டஆய்வின்படி ஆண் உறுப்புக்கும் அவர்களது மூக்கின் அளவுக்கும் குறிப்பிடத்தக்க தொடர்பு உள்ளது என்பது நிரூப்பிக்கப்பட்டது. உல்சான் பல்கலைக்கழக மருத்துவமனை மேற்கொண்ட தற்போதைய ஆய்வு, பாதத்துக்கும், ஆண் உறுப்பின் சுற்றளவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | வூஹான் ஆய்வகத்தில் உருவானதா கொரோனா வைரஸ்? ஆதாரங்கள் இல்லை! கைவிரித்த அமெரிக்கா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News