வட கொரியா ஏவுகணை சோதனை: ஒட்டுமொத்த அமெரிக்காவையும் தாக்க முடியும் - கிம் ஜாங் உன்

Last Updated : Jul 29, 2017, 10:56 AM IST
வட கொரியா ஏவுகணை சோதனை: ஒட்டுமொத்த அமெரிக்காவையும் தாக்க முடியும் - கிம் ஜாங் உன் title=

தங்கள் நாட்டின் கடல் எல்லை அருகில் வடகொரியா புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது என ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியிருக்கிறது என அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூறியுள்ளது. ஆனால் ரஷ்யா, இது குறைந்த அளவிலான தூரம் சென்று தாக்கக் கூடியது என கூறியுள்ளது. 

ஜப்பான் நாட்டின் கடல் எல்லை அருகில் சோதனை நடத்தப்பட்டதால், அந்நாட்டு பிரதமர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், ஏவுகணையை உருவாக்கியவர்களை பாராட்டியதோடு, மொத்த அமெரிக்காவும் வடகொரியாவின் தாக்குதல் இலக்குக்குள் வந்திருகிறது என கூறியதாக அந்நாட்டு மீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வடகொரியாவின் செயலுக்கு அமெரிக்கா மற்றும் ஐநா-வின் பொது செயலாளர் ஆண்டான்யோ குட்ரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Trending News