சியோல்: வடகொரியா தனது வலிமையை அதிகரிக்க ரயிலில் இருந்து ஏவுகணையை செலுத்தி பரிசோதனை நடத்தியது. அமெரிக்காவின் ஜோ பிடன் நிர்வாகம் சமீபத்தில் விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக, ரயிலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்ததாக வட கொரியா கூறுகிறது.
ஏவுகணை சோதனைக்கு சற்று முன்பு, வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம், நாட்டின் முந்தைய பரிசோதனைகள் மீது புதிய தடைகளை விதித்ததற்காக அமெரிக்காவை விமர்சித்ததோடு மட்டுமல்லாமல், அமெரிக்கா "மோதல் அணுகுமுறையை" கடைப்பிடித்தால், அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தது.
ALSO READ | சிரிக்க தடை விதித்த நாடு! மதுவுக்கும் தடா! துக்கத்தை அனுபவியுங்கள்
அதிர்ச்சியில் தென் கொரியா
அதே சமயம், வடகொரியாவில் இருந்து கடலை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதை தான் அறிந்திருப்பதாக தென் கொரியாவின் இராணுவம் கூறியது. இது இந்த மாதத்தில் அதன் மூன்றாவது ஏவுகணை சோதனை ஆகும்.
புதிய ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தும் வடகொரியா
சமீபத்திய மாதங்களில் புதிய ஏவுகணை சோதனைகளை வடகொரியா தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ஏவுகணைச் சோதனைகள் மூலம் தனது அண்டை நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் அழுத்தம் கொடுக்க நினைக்கிறார்.
ALSO READ | Missile: வட கொரியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை ஏற்படுத்தும் போர் அபாயம்
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த வடகொரியா
எனினும், இராணுவத்தின் ஏவுகணைப் படைப்பிரிவின் திறனைச் சோதிப்பதே வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையின் நோக்கம் என வடகொரியா கூறுகிறது.
ALSO READ | நிறைய சாப்பிட்டா நாட்டுக்கு நல்லதல்ல’ அதிபர் கிம்மின் உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR