வட - தென் கொரியா இடையில் ஹாட்லைன் தொடர்பு மீண்டும் துவக்கம்..!!

கடந்த வாரம் வடகொரியா, ஏவுகணையை பரிசோதனை செய்த நிலையில், கிம் ஜாங் உன் கொரியர்களுக்கிடையேயான ஹாட்லைனை மீட்டெடுக்க விருப்பம் தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 4, 2021, 01:32 PM IST
வட - தென் கொரியா இடையில் ஹாட்லைன் தொடர்பு மீண்டும் துவக்கம்..!! title=

அமெரிக்காவுடன் (America) இணைந்து தென்கொரியா (South Korea) மேற்கொண்ட போர் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இரு நாடுகளுக்கு இடையிலான ஹாட்லைன் இணைப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் வட கொரியா (North Korea) துண்டித்தது.

கடந்த வாரம் வடகொரியா, ஏவுகணையை பரிசோதனை செய்த நிலையில், கிம் ஜாங் உன் இரு கொரிய கொரியர்களுக்கிடையேயான ஹாட்லைனை இணைப்பை மீட்டெடுக்க விருப்பம் தெரிவித்தார். தென் கொரியாவுடன் சமாதானமாகப் போகும் தனது விருப்பத்தை தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது கிம் ஜாங் உன்னின் பேச்சு அமைந்திருந்ததாக, அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் அவர் விமர்சித்துள்ளார். அமெரிக்கா தனது வட கொரொயா உடனான பகைமையான கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றிப் பேசுவது ஏமாற்று வேலை என்று கிம் ஜாங் உன் விமர்சனம் செய்துள்ளார். 

மேலும், கொரிய தீபகற்பத்தில் சமாதானத்தை உறுதி செய்வதற்காக ராஜீய நிலையிலான நடவடிக்கைகளை தொடக்க தயாராக இருப்பதாக பிடன் நிர்வாகம் கூறிய போதிலும், இது ஒரு "மோசமான தந்திரம்" என்று கூறிஅமெரிக்க பேச்சுவார்த்தை யோசனையை கிம் நிராகரித்தார்.

ALSO READ | மதுவை மறக்க இரும்பை சாப்பிட்ட நபர்; X-Ray பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்..!!

வடகொரியாவின் அரசு ஊடகமான KCNA, ஹாட்லைன் மூட்டெடுக்கப்பட்டது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளைப் பேணுவதற்கும், "ஆக்கப்பூர்வம்னான முயற்சிகளை" மேற்கொள்வதற்கும் தென் கொரியா அதற்கான உரிய நடவடிக்களை நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.

ஹாட்லைன் மீட்கப்பட்ட நடவடிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை வரவேற்றுள்ளது. "கொரிய தீபகற்பத்தில் மிகவும் நிலையான சூழலை உருவாக்குவதில் இது மிக முக்கியமான் அநடவடிக்கை" என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

ALSO READ | கழிப்பறையில் ‘திடீர்’ பிரசவம்; ‘உள்ளே’ விழுந்த சிசு இறந்த சோகம்..!!

வடகொரியா தனது ஏவுகணைகளை சோதித்த பின்னர் ஐநா பாதுகாப்பு கவுன்சில் இது குறித்து ரகசிய கூட்டத்தை நடத்தியது. இந்த நடவடிக்கை மூலம் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்தது என வட கொரொயா கடுமையாக கண்டனம் செய்தது. நாட்டின் தற்காப்புக்காக ஏவுகணைகளை சோதிக்க வேண்டியது அவசியம் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

ஏவுகணை பரிசோதனைகள் தொடர்பாக, கிம் ஜாங் உன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்புடன் 2018 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். இருப்பினும், அது ஹனோயில் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதிக்க தொடங்கியது.

ALSO READ | Viral Photos: மலைப்பாம்பு இரத்த வாந்தி எடுப்பதை பார்த்திருக்கிறீர்களா..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News