பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதிலிருந்து விடுபட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அங்கு மஹிந்த ராஜபக்சவுக்குப் பதிலாக பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து பல பெரிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
அரசின் முடிவுகளுக்கு இலங்கை மக்களும் ஒத்துழைக்கிறார்கள். அதன் முதல்கட்டமாக, இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செல்ல மாட்டார்கள்.
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதிலிருந்து விடுபட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இலங்கையின் குடிமக்களும் இந்த மோசமான கட்டத்தில் இருந்து வெளியேற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கை முஸ்லிம்கள் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர். இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்வதில்லை என அங்குள்ள முஸ்லிம் மக்கள் தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் படிக்க | ஹஜ் வழிகாட்டுதல்கள்: ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தொடங்கம்
பல அமைப்புகள் இணைந்து முடிவெடுத்துள்ளன
இலங்கை ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, 2022 ஆம் ஆண்டில், இலங்கை இஸ்லாமியர்களில் 1585 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளலாம் என ஹஜ் யாத்ரீகர்களுக்கு சவுதி அரேபியா இட ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால், இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு இலங்கையின் தரப்பில் இருந்து யாரும் ஹஜ் புனித யாத்திரைக்கு செல்ல வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய ஹஜ் குழு, இலங்கை ஹஜ் சுற்றுலா நடத்துவோர் சங்கம் மற்றும் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் துறை உட்பட பல தரப்பினரின் கலந்தாலோசனைகளுக்குப் பிறகு,இலங்கையிலிருந்து எந்தவொரு இஸ்லாமியரும் இந்த ஆண்டு ஹஜ் கடமையில் ஈடுபடுவதில்லை என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் படிக்க | பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை
பொருளாதார நிலைமை சரியில்லை, அதனால் ஹஜ் இல்லை
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் துறைக்கு, அகில இலங்கை ஹஜ் சுற்றுலா நடத்துவோர் சங்கம் மற்றும் இலங்கை ஹஜ் சுற்றுலா செயற்பாட்டாளர்கள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
அதில், “எமது நாட்டின் இலங்கையின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டும், மக்கள் படும் இன்னல்களை கருத்தில் கொண்டும் இந்த ஆண்டு ஹஜ்ஜை புறக்கணிக்க இரு சங்கங்களும் முடிவு செய்துள்ளன. எனவே இந்த ஆண்டு இலங்கையிலிருந்து எந்த ஒரு இஸ்லாமியரும் ஹஜ் யாத்திரைக்கு செல்ல மாட்டார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி தேவை
இவை அனைத்திற்கும் மத்தியில், ஹஜ் டூர் ஆபரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் ரிஸ்மி ரியால் இவ்வாறு கூறுகிறார்:
"நாடு தற்போது கடுமையான டாலர் நெருக்கடியை எதிர்கொள்கிறது, இந்த நெருக்கடியை சமாளிக்க நாட்டிற்கு அதிக அளவில் அந்நிய செலாவணி கையிருப்பு தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் இம்முறை இலங்கையிலிருந்து எவரும் ஹஜ்ஜுக்குச் செல்வதில்லை என அனைவரும் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானித்துள்ளோம்.
மேலும் படிக்க | தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் நிவாரண பொருட்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR