US Elections: விண்வெளியில் இருந்து தங்களை வாக்குகளை செலுத்தும் விண்வெளி வீரர்கள்..!!!

‘I Voted Today’: விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ் (Kate Rubins) விண்வெளியில் இருந்து அமெரிக்க தேர்தலுக்கான தனது வாக்குகளை பதிவு செய்த பின் மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 27, 2020, 07:35 PM IST
  • வாக்களிப்பது ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் இன்றியமையாத செயல் என்பதை உணர்த்தும் வகையில், விண்வெளியில் இருந்த போதிலும், அமெரிக்க விண்வெளி வீராங்கணை, 2020 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது வாக்கை செலுத்தியுள்ளார்.
  • 2016 தேர்தலின் போதும் ரூபின்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வாக்களித்திருந்தார் என நாசா தெரிவித்துள்ளது.
US Elections: விண்வெளியில் இருந்து தங்களை வாக்குகளை செலுத்தும் விண்வெளி வீரர்கள்..!!! title=

‘I Voted Today’: விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ் (Kate Rubins) விண்வெளியில் இருந்து அமெரிக்க தேர்தலுக்கான தனது வாக்குகளை பதிவு செய்த பின் மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்தார்.

வாக்களிப்பது ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் இன்றியமையாத செயல் என்பதை உணர்த்தும் வகையில், விண்வெளியில் இருந்த போதிலும், அமெரிக்க (America)  விண்வெளி வீராங்கணை, 2020 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது வாக்கை செலுத்தியுள்ளார்.

எங்கிருந்தாலும் வாக்கு செலுத்துவது மிகவும் முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார். 

நாசா (NASA) விண்வெளி வீராங்கனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள படத்தில், ரூபின்ஸின் புகைப்படத்தில், அவர் புவி ஈர்ப்பு இல்லாத நிலையில், அவர் மிதந்து கொண்டிருக்கிறார். ஒரு வெள்ளை நிற அடைப்புக்கு முன்னால் ஒரு காகித்தில் “ஐஎஸ்எஸ் வாக்குச் சாவடி” என்று எழுதப்பட்டிருந்தது.

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எவ்வாறு வாக்களிக்கிறார்கள்:

"விண்வெளியில் இருந்து வாக்களிப்பதை சட்டப்பூர்வமாக அனுமதிக்க, 1997  ஆம் ஆண்டு, டெக்சாஸில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போதிருந்து விண்வெளியிலிருந்து வாக்களிக்கும் நடைமுறை தொடர்கிறது" என்று நாசா கூறியது.

ALSO READ | இந்தியா அமெரிக்கா இடையிலான 2+2 பேச்சுவார்த்தையில் கையெழுத்தான மிக முக்கிய BECA ஒப்பந்தம்...!!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு (US ELECTIONS) இன்னும் ஒரு வார காலம் இருக்கும் நிலையில்,  அதற்கு முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் நாசா விண்வெளி வீரர்கள், பாதுகாக்கப்பட்ட ஒரு மின்னணு வாக்குப்பதிவுக்கான இணைப்பு, ஈமைல் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்படும். அதில் அவர்கள் விபரங்களை நிரப்பியவிடன், அது இங்குள்ள அலுவலகத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் என நாசா தெரிவித்தது. 

 2016 தேர்தலின் போதும் ரூபின்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வாக்களித்திருந்தார் என நாசா தெரிவித்துள்ளது.

“எல்லோரும் வாக்களிப்பது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். விண்வெளியில் இருந்து என்னால் வாக்களிக்க முடியும் என்றால், பூமியில் இருக்கும் எல்லோரும் செய்யலாம் என்று நான் நம்புகிறேன். நாம் ஜனநாயகத்தில் பங்கேற்பது மிகவும் முக்கியமானது. விண்வெளியில் இருந்து வாக்களிக்க முடிந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன், ”என்று ரூபின்ஸ் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார்.

கேட் ரூபின்ஸ், ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆறு மாத காலத்திற்கு விண்வெளிப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ALSO READ | சீனாவில் கடும் உணவு நெருக்கடி, விவசாய நிலத்தை பிற நாடுகளில் குத்தகைக்கு எடுக்கும் நிலை..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News