Miss World 2021 போட்டி ஒத்திவைக்கப்பட்டது: இந்தியாவின் மான்சா உட்பட பலருக்கு கொரோனா

‘மிஸ் வேர்ல்ட் 2021’ இன் இறுதிப் போட்டி புயூரிட்டோ ரிக்கோவில் உள்ள ஜோஸ் மிகுவல் அக்ரெலோட் கொலிசியத்தில் நடைபெறவிருந்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 17, 2021, 04:43 PM IST
Miss World 2021 போட்டி ஒத்திவைக்கப்பட்டது: இந்தியாவின் மான்சா உட்பட பலருக்கு கொரோனா title=

உலகம் முழுவதும் கொரோனாவின் புதிய மாறுபாடான ஓமிக்ரானின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றின் முந்தைய மாறுபாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. 

கொரோனா தொற்றால் தற்போது 2021 ஆம் ஆண்டின் உலக அழகிப் போட்டி 2021 (Miss World 2021) இன் இறுதிப் போட்டியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்குகொண்ட போட்டியாளர்களின் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகவே, தற்போது இறுதிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவின் மான்சா வாரணாசி உட்பட மொத்தம் 23 பேருக்கு  தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

உலக அழகி இறுதிப்போட்டி நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது

‘மிஸ் வேர்ல்ட் 2021’ இன் இறுதிப் போட்டி புயூரிட்டோ ரிக்கோவில் உள்ள ஜோஸ் மிகுவல் அக்ரெலோட் கொலிசியத்தில் நடைபெறவிருந்தது. எனினும், நிகழ்வுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு போட்டி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

கொரோனா காரணமாக, இறுதிப் போட்டி பின்னர் நடைபெறும் என அமைப்பாளர்கள் தெரிவித்தனர். உலக அழகி போட்டியின் அமைப்பாளர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில், பணியாளர்கள், பங்கேற்பாளர்கள் என அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இறுதிப்போட்டியை ஒத்திவைக்க முடிவு செய்யதுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ | 20 ஆண்டுகளுக்கு பின் ‘MISS UNIVERSE’ பட்டம் வென்ற இந்திய பெண் 

97 போட்டியாளர்களில் 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

அறிக்கையின்படி, போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள், புயூரிட்டோ ரிக்கோவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு இந்த இறுதிப் போட்டி நடைபெறவிருந்தது. மேலும் 97 போட்டியாளர்களில் 23 பேருக்கு கொரோனா தொற்று (Coronavirus) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, சில ஊழியர்களுக்கும் தொற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் மான்சா வாரணாசியின் பெயரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளது. மிஸ் இந்தியா வேர்ல்ட் 2020 பட்டத்தை வென்ற மான்சா, மிஸ் வேர்ல்ட் 2021 சர்வதேச அழகிப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

கொரோனா தொற்று காரணமாக போட்டிகள் நிறைவடைந்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ள மிஸ் இந்தியா அமைப்பு, இந்தியாவை பிரதிநிதிப்படுத்தும் மான்சாவின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் தான் மிக முக்கியம் என கூறியுள்ளது. 

ALSO READ | Omicron Alert: சர்வதேச அளவில் அதிகரிக்கும் ஒமிக்ரான்! இங்கிலாந்தில் பாதிப்பு தீவிரம்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News