ஆஸ்திரேலிய மாடலும், 2022 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸிற்கான இறுதி போட்டியாளருமான சியன்னா வீர், ஆபத்தான குதிரை சவாரி விபத்தைத் தொடர்ந்து அவரது உயிர் காப்பு சாதனங்களை அகற்றிய பின்னர் 23 வயதில் பரிதாபமாக உயிரிழந்தார். ஏப்ரல் 2 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள வின்ட்சர் போலோ மைதானத்தில் வீர், குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்தார. அப்போது அவரது குதிரை தவறி கீழே விழுந்தது. அப்போது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் அவசரமாக வெஸ்ட்மீட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் பல வாரங்கள் உயிர் காக்கும் சாதனங்களின் ஆதரவுடன் உயிருடன் இருந்தார். இந்நிலையில், மே 4, வியாழன் அன்று சியன்னா வீர் இறந்தார், வீரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த தகவலை உறுதிப்படுத்தியதாக News.com.au செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
சியன்னா வீர் குடும்பத்தினர் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர் மற்றும் அவர்கள்உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால், அவரை உயிர் காக்கும் சாதனங்களின் ஆதரவிலிருந்து நீக்க முடிவு செய்ததாக தெரிவித்தனர். வியாழக்கிழமை அவர் இறந்ததை உறுதிப்படுத்திய ஸ்கூப் மேனேஜ்மென்ட், இறந்த போன மாடலின் பல படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது. என்றென்றும் நம் இதயத்தில் இருக்கும் அழகி என்று பகிரப்பட்ட படங்களுக்கு தலைப்பு கொடுக்கப்பட்டது.
2022 இல் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பெறும் முதல் 27 போட்டியாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் சியன்னா வீர் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சிட்னி பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இரட்டைப் பட்டம் பெற்றார். அவர் தனது தொழிலைத் தொடர UK செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். அவர், "என் சகோதரி, அவரது மகள் மற்றும் அவரது மகனுடன் அதிக நேரம் செலவழிக்கவும், எனது தொழில்முறை மற்றும் சமூக வலைப்பின்னல் இரண்டையும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளேன்" என உள்ளூர் நண்பர்களிடம் அவர் முன்பு கூறினார்.
ஆஸ்திரேலிய ஃபிட்னஸ் மாடல் வாழ்நாள் முழுவதும் குதிரை சவாரி செய்யும் ஆர்வலராக இருந்துள்ளார். கோல்ட் கோஸ்ட் இதழிடம் அவர் கூறுகையில், ''என் வாழ்க்கையின் பெரும்பகுதியை நான் நகரத்தில் வாழ்ந்தாலும், குதிரை சவாரியில் எனக்கு ஆழ்ந்த மற்றும் அசைக்க முடியாத அன்பு உண்டு. இந்த ஆர்வம் எங்கிருந்து வந்தது என்று எனது குடும்பத்தினருக்கு சரியாகத் தெரியவில்லை, ஆனால் நான் 3 வயதிலிருந்தே குதிரை சவாரி செய்து வருகிறேன், குதிரை சவாரி இல்லாமல் என் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. ஒவ்வொரு வார இறுதியில் நியூ சவுத் வேல்ஸ் அல்லது பரந்த ஆஸ்திரேலியாவைச் சுற்றிப் பயிற்சி பெறவும், போட்டியிடவும் நான் வாரத்திற்கு 2-3 முறை கிராமப்புற சிட்னிக்குச் செல்கிறேன் என முன்பு அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Miss Universe 2023: மிஸ் யுனிவர்ஸ் வெற்றியாளர் யார்? கிரீடத்தின் மதிப்பு என்ன?
இதற்கிடையில், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் மாடலிங் துறையில் உள்ள சக ஊழியர்களின் அஞ்சலிகளால் சமூக ஊடகங்களில் பதிவுகள் நிரம்பி வழிகின்றன. பலர் தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர். "உலகின் அன்பான ஆத்மாக்களில் நீங்கள் ஒருவராக இருந்தீர்கள், நீங்கள் இருக்கும் இடத்தை ஒளிரச் செய்தீர்கள், நீங்கள் மறைந்துவிட்டதால் உலகம் மிகவும் இருட்டாகிவிட்டது" என்று ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞர் கிறிஸ் டுவயர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில், அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற 71வது பிரபஞ்ச அழகி போட்டியில் (Miss Universe 2022) பிரபஞ்ச அழகி 2022-ன் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்த முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் R'bonney Gabriel வென்றார். இதில் 86-க்கும் மேற்பட்ட பெண்கள் உலக பிரபஞ்ச அழகி கிரீடத்திற்காக போட்டியிட்ட நிலையில், அமெரிக்காவின் R'bonney Gabriel இந்தப் பட்டத்தை வென்றார். வெனிசுலாவின் டயானா சில்வா இரண்டாவது இடத்தையும், டொமினிகன் குடியரசின் அமி பெனா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Farhana: ஃபர்ஹானா பட பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ