பாலியில் உள்ள மக்கள் இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக, ஒரு திமிங்கலத்தின் சடலத்தைக் கண்டனர். ஞாயிற்றுக்கிழமை, மற்றொரு பிரம்மாண்ட திமிங்கலத்தின் உடல் பாலி கடற்கரையின் கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்தனர். கடந்த ஒரு வார காலத்தில் இது போன்ற மூன்றாவது சம்பவம் இதுவாகும். அதிகாரிகளின் கூற்றுப்படி, சமீபத்திய திமிங்கிலம், 56 அடி நீளம் (அல்லது 17 மீட்டர் நீளம்) எண்னெய்த் திமிங்கலம் ஆகும். மேற்கு பாலியின் ஜெம்ப்ரானா மாவட்டத்தில் உள்ள யே லே கடற்கரையில் இது சனிக்கிழமை பிற்பகல் கரை ஒதுங்கியது. இறப்புக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், உள்ளூர் கடல் மற்றும் மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் AFP இடம் பேசுகையில், "சில நாட்களுக்கு முன்பு கரை ஒதுங்கிய திமிங்கிலம் போல" இந்த திமிங்கிலமும் நோயால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தைப் பகிர்ந்து கொண்டார்.
உள்ளூர் கடல் மற்றும் மீன்வளத்துறை அதிகாரி பெர்மனா யுடியார்சோ கூறுகையில், உடல் வழக்கத்தை விட ஒல்லியாகவும், உடல்நிலை சரியில்லாமல் இருந்தது போலும் காணப்பட்டது என்றார். சடலத்தை கரைக்கு இழுக்க முயற்சிப்பதாக யுடியார்சோ AFP இடம் கூறினார். தற்போது பிரேத பரிசோதனையை எளிதாக்கும் வகையில் சடலத்தை கரைக்கு இழுக்க முயற்சித்து வருகிறோம், சோதனை முடிந்ததும் புதைப்போம் என்றார்.
AFP வெளியிட்டுள்ள தகவலில், பிரேத சோதனை சுமார் மூன்று வாரங்கள் ஆகும். இருப்பினும், தடயவியல் நிபுணர்கள் எண்ணெய் திமிங்கலத்தின் நுரையீரலில் இரத்தப்போக்கு இருப்பதை அடையாளம் கண்டுள்ளனர். அதன் பெருங்குடல் திரவங்களால் நிரப்பப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது என கூறப்பட்டுள்ளது. பிரம்மாண்ட திமிங்கல உடல் இருக்கும் பகுதியை போலீஸார் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் இறைச்சி அல்லது உடல் உறுப்புகளை மக்கள் திருடுவதைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன், ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து, பாலியின் கடற்கரைகளில் இரண்டு இறந்த திமிங்கலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஏப்ரல் 1 ஆம் தேதி, இரண்டு டன்களுக்கும் அதிகமான எடையும் குறைந்தது 11 மீட்டர் நீளமும் கொண்ட திமிங்கலம் தபானான் கடற்கரையில் கரை ஒதுங்கியது. திமிங்கலத்தின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டபோது ஏற்கனவே அழுகியிருந்தது என AFP செய்திகள் கூறின. இதையடுத்து, ஏப்ரல் 5ஆம் தேதி புதன்கிழமை, பாலியின் கிழக்குக் கடற்கரையில் உள்ள க்லுங்குங் மாவட்டத்தில் 18 மீட்டர் நீளமுள்ள ஆண் எண்ணெய் திமிங்கலம் கரை ஒதுங்கியது.
மேலும் படிக்க | 30 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகளில் இருந்து பிறந்த இரட்டை குழந்தைகள்!
இந்தோனேசியா உலகின் இரண்டாவது பெரிய கடல் குப்பைகளை அதிக கொண்ட நாடாக உள்ளது. தென்கிழக்கு ஆசிய தீவுக்கூட்டத்தின் மிக முக்கிய கடல் குப்பை பிரச்சினை சில ஆண்டுகளுக்கு முன்பு கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 2018 இல், இதேபோன்ற ஒரு சம்பவத்தில், இந்தோனேசிய கடற்கரையில் ஒரு எண்ணெய் திமிங்கலம் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், பாலூட்டியின் வயிற்றில் 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் 25 பிளாஸ்டிக் பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எண்ணெய்த் திமிங்கிலங்கள் உலகெங்கிலும் காணக்கூடிய மிதவைப் பாலூட்டிகள். இவை இரைதேடியும், இனப்பெருக்கத்துக்காகவும் காலநிலைக்கேற்ப இடம் விட்டு இடம் செல்பவை. பெண் திமிங்கிலங்களும் இளம் ஆண் திமிங்கிலங்களும் கூட்டமாக வாழும். வயது வந்த ஆண் திமிங்கிலங்கள் பெரும்பாலும் தனித்து வாழும். இனப்பெருக்க காலங்களில் மட்டுமே பெண் திமிங்கிலங்களை நாடும். நான்கு முதல் இருபது ஆண்டுகள் வரையிலான இடைவெளியில் பெண் திமிங்கிலங்கள் குட்டிகளை ஈனுகின்றன. பத்து ஆண்டுகள்வரை தமது குட்டிகளை வளர்க்கின்றன. விந்து திமிங்கலம் எனவும் இது அழைக்கப்படுகிறது. இதன் தலையில் உள்ள ஒரு உறுப்பு ஸ்பெர்மாசெட்டி என்று அழைக்கப்படுகிறது. இதில் எண்ணெய் நிரப்பப்பட்டிருக்கும்.
மேலும் படிக்க | இது ரத்தக்களறியான பூமி போல... இரத்த சிவப்பு நிறத்தில் பாயும் ஆறு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ