மாலே: மாலத்தீவுகள் நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நஷீத்தை விடுதலை செய்ய அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள நாடு, மாலத்தீவு. மாலத்தீவுகள் ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் அதிபருமான முகமது நசீத், தனது ஆட்சியின் போது அரசியலமைப்பு சட்டத்தை மீறி நீதிபதிகளை கைது செய்ய உத்தரவிட்டது.
எதிர்க்கட்சி தலைவர்களை கைது சிறையிலடைத்தது போன்ற சம்பவங்களால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து, நஷீத் ஆட்சி கவிழக்கப்பட்டது. நஷீத்திற்கு எதிராக, பயங்கரவாத குற்றம் சுமத்தப்பட்டு, விசாரணை முடிவில், 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னதாக நாட்டை விட்டு வெளியேறிய நஷீத் லண்டனில் அரசியல் தஞ்சமடைந்தார். இந்நிலையில் நஷீத்தின் ஆதரவாளர்கள் 12-பேர் சிறையிலடைக்கப்பட்டனர். சுப்ரீம் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கி்ல் நியாயமான முறையில் விசாரணை நடக்கவில்லை என முகமது நஷீத் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
#Maldives' SC orders release of ex-president #MohamedNasheed
Read @ANI story | https://t.co/ZzKHFYL3ng pic.twitter.com/1CVY5Q7Ui8
— ANI Digital (@ani_digital) February 2, 2018