பெய்ஜிங்: தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு அடிபணிய மறுத்துள்ளது, வெறும் 30 லட்சம் மக்கள் தொகை சிறிய நாடான லிதுவேனியா. லிதுவேனியா, சீனாவிடம் தலைவணங்க மறுத்து, சீனா நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றைச் செய்துள்ளது. இந்த சிறிய நாடு, தைவான் ஒரு பிரதிநிதி அலுவலகத்தைத் திறக்க அனுமதித்துள்ளது. இதனால் கோபமடைந்த சீனா, லிதுவேனியாவுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டது. லிதுவேனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்வாக்கு மிக்க நாடாக இருப்பதால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான (EU) பெய்ஜிங்கின் உறவுகளை இந்த நடவடிக்கை பாதிக்கும் என நம்பப்படுகிறது.
சீனாவின் (China) வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் சீனா என்ற் கூறினால், அது சீனா முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சட்டபூர்வமான அரசாங்கம் சீன மக்கள் குடியரசு மட்டுமே என்றும், தைவான் தனியாக அலுவகத்தை திறப்பை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளது. தைவான் தனியாக ஜனநாயக நாடாக செயல்பட்டு வந்தாலும், இது வரை தனி நாடாக அங்கீகரிக்காமல் சீன மக்கள் குடியரசை சேர்ந்தது என சீனா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | செயற்கைக்கோளை அழித்த ரஷ்யா; விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; கலக்கத்தில் NASA..!!
லிதுவேனியா சீனாவின் தீவிர நிலைப்பாட்டை புறக்கணித்து லிதுவேனியாவில் தைவானின் பெயரில் ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவ அனுமதி வழங்கியுள்ளது. இதை அடுத்து லிதுவேனியாவின் தலைநகரான வில்னியஸில் இருந்து சீனா தனது தூதரை திரும்பப் பெற்றுள்ளது. சீன இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் என்னும் ஐரோப்பிய ஆய்வுகள் துறையின் இயக்குனர் குய் ஹாங்ஜியன் குளோபல் டைம்ஸிடம், இது குறித்து கூறுகையில், ‘தூதரை திரும்ப அழைத்துக் கொள்வது சீன-லிதுவேனியா இராஜதந்திர உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டதை உணர்த்துகிறது’ என்று கூறினார்.
ALSO READ | விண்வெளியில் போர் மூண்டால் சாமான்யரின் வாழ்க்கையும் ஸ்தபித்து விடும்..!!!
எனினும், லிதுவேனியாவுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் (Europe) சீனாவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளக் கூடும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். முன்னதாக, 1981 ஆம் ஆண்டு மே மாதத்தில், தைவானுக்கு நீர்மூழ்கிக் கப்பலை விற்பனை செய்ய நெதர்லாந்து ஒப்புக் கொண்ட பிறகு, நெதர்லாந்துடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்ட சீனா இதேபோன்ற முடிவை எடுத்தது.
மறுபுறம், லிதுவேனியாவின் பொருளாதார அமைச்சர் ஆஸ்ட்ரின் ஆர்மோனெட், பெய்ஜிங்கின் பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ள அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடன் $600 மில்லியன் ஏற்றுமதி கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று கூறினார். லிதுவேனியாவுடனான சீனாவின் மோதல், சின்ஜியாங், ஹாங்காங் மற்றும் திபெத்தில் கம்யூனிஸ்ட் கட்சியால் மனித உரிமை மீறல்கள் பற்றிய பிரஸ்ஸல்ஸின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடனான பெய்ஜிங்கின் உறவுகள் தொடர்ந்து பாதிக்கப்படும் நிலையில் உள்ளன.
தைவானை தொடர்ந்து சீனா உரிமை கோரி வரும் நிலையில், சமீபத்திய வாரங்களில் தைவானின் வான்வெளிக்குள் 200க்கும் மேற்பட்ட ராணுவ விமானங்களை சீனா அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | ‘எல்லாமே அலர்ஜி என்றால் எப்படித் தான் வாழ்வது’; இளம் பெண்ணின் பரிதாப வாழ்க்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR