ஒரே நேரத்தில் 140 குழந்தைகள் நரபலி கொடுத்து கொடூரம்!

550 ஆண்டுகளுக்கு முன், ஒரே நேரத்தில் 140 குழந்தைகள் நரபலி கொடுத்துள்ளது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது! 

Last Updated : Apr 28, 2018, 01:00 PM IST
ஒரே நேரத்தில் 140 குழந்தைகள் நரபலி கொடுத்து கொடூரம்!  title=

பெரு நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ள ட்ருஜிலோ நகரத்தில் லாஸ் லாமாஸ் பகுதியில் 550 ஆண்டுகளுக்கு முன், ஒரே நேரத்தில் 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டது ஆராய்சியின் பொது தெரியவந்துள்ளது. 

லாஸ் லாமாஸ் பகுதிக்கு ட்ருஜிலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் பேராசிரியர் கேப்ரியல் ப்ரிடோ மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் வெரானோ உள்ளிட்டோர் அடங்கிய சர்வதேச ஆராய்ச்சி குழு ஒன்று, நேஷனல் ஜியோகிரஃபிக் சொசைட்டி உதவியுடன் லாஸ் லாமாஸ் பகுதியில் தொல்பொருள் ஆய்வை 2011-ம் ஆண்டு துவங்கியுள்ளது. 

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் முதன் முதலில் கடந்த வியாழன் கிழமையன்று (26-04-2018) நேஷனல் ஜியோகிரஃபிக் இணையத்தளத்தில்  வெளியிடப்பட்டது. அதில், ஆய்வின் பொது கிடைத்த எலும்புகள், மண்டை ஓடு ஆகியவற்றை கார்பன் பரிசோதனை செய்ததில், சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு, (கி.பி 1450-ம் ஆண்டு காலகட்டத்தில்) ஒரு மாபெரும் நரபலி நிகழ்வு நடந்திருப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 

அந்த நரபலியில் 5-14 வயதுக்கும் உட்பட்ட சுமார் 140 குழந்தைகளின் எலும்புகளை கண்டுபிடித்துள்ளனர். இத்துடன் 200 இளம் ஒட்டகங்களின் எலும்புகளையும் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகளுடன் இந்த ஒட்டகங்களும் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

இது போன்றே கடந்த 2011-ம் ஆண்டு, இதே இடத்தில் சுமார் 3,500 ஆண்டுகள் பழைமையான கோயிலில் நடத்திய தொல்பொருள் ஆய்வில்,  40 மனிதர்கள் மற்றும் 74 ஒட்டகங்களின் எலும்கபுளை கண்டுபிடித்தனர். 

மேலும், பெரு நாட்டில் கண்டுபிடித்துள்ள இந்த நரபலிதான் உலக வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்ட நிகழ்வாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending News