இந்த உலகம் நிச்சயம் சுவாரஸ்யங்கள் நிறைந்தது. விந்தையான இந்த உலகத்தில், தினம் தினம் நமக்காக ஆச்சர்யங்கள் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் , இப்போது இங்கே படிக்க உள்ள ஒரு விஷயத்தை நீங்கள் கேள்விப் பட்டிருக்கவே முடியாது. அதைக் கேட்டால் ஆச்சரியம் மட்டுமல்ல, உங்களுக்கு வாந்தி கூட வரலாம். உலகிலேயே மிகவும் அழுக்கான 65 ஆண்டுகளாக குளிக்காத ஒரு நபரைப் பற்றி கேட்டால் உங்களுக்கு நிச்சயம் குமட்டல் வரும்.
83 வயதான அமோ (Amou Haji), 65 ஆண்டுகளாக தனது உடலில் ஒரு சொட்டு நீர் (Water) கூட படாமல் தன்னை பாதுகாத்து வருகிறார். ஏனெனில் அவர் தண்ணீரைக் கண்டால் அச்சம்! குளித்தால் அவருக்கு நோய் வந்துவிடும் என்று பயப்படுகிறாராம்!
அமோ ஹாஜிக்கும் சுத்தத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத தூரம். அவருக்கு சுத்தம் (Cleanliness) என்றாலே அலர்ஜி! தான் குளிக்கவில்லை என்பதோடு, தான் பயன்படுத்தும் பொருட்களையும் சுத்தம் செய்யும் பழக்கமே அவருக்கு கிடையாது. ஈரானில் வசிக்கும் அமோ ஹாஜி, கடந்த 65 ஆண்டுகளாக குளிக்கவில்லை என்று கூறுகிறார். அமோ ஹாஜியின் வாழ்க்கை முறையும் அதிர்ச்சளிப்பதாகவே இருக்கிறது.
ALSO READ | Watch Viral Video: ‘குடிமகளுக்கு’ நேர்ந்த வேதனை; ஏறிய போதை நொடியில் இறங்கிய சோதனை
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், அவரது இந்த 83 வயதில் கூட ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதாக கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, அவர் குளிக்காமல் அழுக்காக இருப்பதால் தான் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று நம்புகிறார். ஆனால், இத்தனை ஆண்டுகளாக குளிக்காமல் நாற்றத்துடன் இருக்கும் Amou Haji, இதன் காரணமாக கிராமத்திற்கு வெளியே தான் தங்க வேண்டியிருக்கிறது.
இந்த அழுக்கு மனிதரின் உணவுப் பழக்க வழக்கங்களும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. இறந்த விலங்குகளின் அழுகிய இறைச்சியை (Meat) சாப்பிடுவதே அவருக்கு பிடிக்குமாம்! அந்த விலங்குகள் விபத்தில் இறந்திருந்தாலும் சரி, இயற்கை வழியில் இறந்திருந்தாலும் சரி, அது பற்றி அவருக்கு கவலையில்லை! அசைவ உணவையே விரும்பி சாப்பிடும் அமாவு (Amou), அழுகிய உள்நாட்டு கீரைகள் மற்றும் காய்கறி உணவுகளையும் விரும்புகிறார். அமோவுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட சுவையான உணவு சாப்பிட பிடிக்கவே பிடிக்காது! இப்படி பல ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறார் அழுக்கு அமோ (Amou)
Amou ஹாஜிக்கு சொந்தமாக வீடு கூட இல்லை. அவர் தனது கிராமத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் வெட்டவெளியில் வசிக்கிறார். இருப்பினும், கிராமவாசிகள் Amou-க்காக ஒரு சிறிய குடிசையை கட்டிக் கொடுத்துள்ளனர். ஆனால் அவருக்கு வெட்டவெளியே பிடித்திருக்கிறதாம். இவ்வளவு அழுக்காக இருந்தாலும், அழுகிய மாமிசத்தையும், காய்கறிகளையும் சாப்பிட்டாலும் அவருக்கு எந்தவித நோயோ தொற்றொ இல்லை என்பது அதிசயம் தான். கிராம மக்கள் அவ்வப்போது வந்து, அழுக்கு மனிதரை சந்தித்து செல்கிறார்கள்
அமாவுக்கு சிகரெட் புகைப்பது மிகவும் பிடிக்குமாம்… சிகரெட் புகைப்பதிலும் அமோ வித்தியாசமானவர் தான். கிராமவாசிகள் அழுக்கு மனிதருக்கு கொடுக்கும் சிகரெட்டுகள் தீர்ந்து விட்டால் என்ன செய்வார் தெரியுமா? தனது சிகரெட் பைப்பில், விலங்குகளின் உலர்ந்த மலத்தை போட்டு புகைப்பாராம்! இந்த உலகின் அனைத்து வசதிகளையும் துறந்துவிட்டு, இப்படி வாழ்வது தான் தனக்கு பிடித்திருப்பதாக உலகின் அழுக்கு மனிதர் கூறுகிறார்.
ALSO READ | COVID-19: இந்தியாவின் இந்த கிராமத்தில் இன்று வரை கொரோனா இல்லை; இல்லவே இல்லை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR