Kim Jong Un: உலகின் அணு ஆயுத வல்லரசாவதே வடகொரியாவின் இலக்கு

North Korea Vs World Power: வடகொரியாவின் இறுதி இலக்கு உலகின் வலிமையான அணுசக்தியை வைத்திருப்பதே என்று கிம் ஜாங் உன் கூறுகிறார் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 27, 2022, 10:51 AM IST
  • உலகின் அணு ஆயுத வல்லரசாவதே வடகொரியாவின் இறுதி இலக்கு
  • நம்பர் ஒன் அணு ஆயுத நாடாக்குவோம்: கிம் ஜாங் உன் சூளுரை
  • கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை
Kim Jong Un: உலகின் அணு ஆயுத வல்லரசாவதே வடகொரியாவின் இலக்கு title=

பியாங்யோங்: அணுசக்தியை உருவாக்குவது என்பது, வடகொரியாவின் கண்ணியம் மற்றும் இறையாண்மையை நம்பத்தகுந்த வகையில் பாதுகாப்பதற்காகவே என்று, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உங் தெரிவித்துள்ளார். உலகின் மிக சக்திவாய்ந்த அணுசக்தியை வைத்திருப்பதே நாட்டின் இறுதி இலக்கு என்று அதிபர் கிம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், வட கொரியாவின் மிகப் பெரிய ஏவுகணையை ஏவும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியபோது கிம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் புதிய Hwasong-17 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் (ICBM) சோதனையை கிம் ஆய்வு செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹ்வாசோங்-17 ஐ "உலகின் வலிமையான மூலோபாய ஆயுதம்" என்றும் கிம் அழைத்தார்.

மேலும் படிக்க | பத்து நாட்களில் ஐந்தாவது ஏவுகணை பரிசோதனை: அமெரிக்காவுக்கு சவால் விடும் வட கொரியா

அணுசக்தியை உருவாக்குவது என்பது வடகொரியாவின் கண்ணியம் மற்றும் இறையாண்மையை நம்பத்தகுந்த வகையில் பாதுகாப்பதற்காகவே என்று அதிகாரிகளை பாராட்டி ஊக்குவிக்கும்போது கிம் ஜாங் உன் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

வட கொரியாவின் இறுதி இலக்கு என்பது, உலகின் மிக சக்திவாய்ந்த மூலோபாய சக்தியை, இந்த நூற்றாண்டில் முன்னோடியில்லாத முழுமையான சக்தியைக் கொண்டிருப்பது நாட்டின் இறுதி லட்சியம் என்றும் கிம் ஜாங் உன் தெரிவித்ததாக வட கொரியாவின் அரசு செய்தி ஊடகம் KCNA தெரிவித்து இருக்கிறது.

ஆனால், மேலும் விரிவான தகவல்களை வழங்காத கிம், வட கொரிய விஞ்ஞானிகள் "பாலிஸ்டிக் ஏவுகணைகளில் அணு ஆயுதங்களை ஏற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஒரு அற்புதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க | கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்! மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவியது வட கொரியா

உச்ச மக்கள் சபையின் வட கொரியாவின் சக்திவாய்ந்த நிலைக்குழுவானது, Hwasong-17 ஏவுகணைக்கு "DPRK ஹீரோ மற்றும் கோல்ட் ஸ்டார் மெடல் மற்றும் ஆர்டர் ஆஃப் நேஷனல் ஃபிளாக் 1 வது வகுப்பு" (DPRK Hero and Gold Star Medal and Order of National Flag 1st Class) என்ற பட்டத்தை வழங்கியதாக KCNA மற்றொரு செய்தியில் தெரிவித்துள்ளது.

"(ஏவுகணை) DPRK என்பது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் அணுசக்தி மேலாதிக்கத்திற்கு எதிராக நிற்கும் திறன் கொண்ட ஒரு முழு அளவிலான அணுசக்தி சக்தி என்பதை உலகின் முன் தெளிவாக நிரூபித்துள்ளது மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ICBM நாடாக வட கொரியா அதன் வலிமையை முழுமையாக நிரூபித்துள்ளது" என்று KCNA செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | ரஷ்யாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ததே இல்லை: வடகொரியா

மேலும் படிக்க | வட கொரியாவின் அடுத்த வாரிசு! கிம் ஜாங் உன் மகள் princess Ju Ae

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News