இஸ்ரேல் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதா தொடர்பான 15 நீதிபதி உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரணை

Jerusalem Needs Democracy: இஸ்ரேல் நீதித்துறை மறுசீரமைப்பு தொடர்பான உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு முன்னதாக, ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் ஜெருசலேம் முழுவதும் பேரணி நடத்தினார்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 12, 2023, 07:41 AM IST
  • இஸ்ரேல் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதா
  • இன்று உச்ச நீதிமன்ற விசாரணை
  • முதன்முறையாக 15 நீதிபதி சட்ட அமர்வு விசாரிக்கும் வழக்கு
இஸ்ரேல் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதா தொடர்பான 15 நீதிபதி உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரணை title=

ஜெருசலேம்: இஸ்ரேல் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக இன்று (2023 செப்டம்பர் 12, செவ்வாய்கிழமை) அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வரலாற்றில் முதல்முறையாக 15 நீதிபதிகள் கொண்ட முழு பெஞ்சையும் கூட்டி வழக்கை விசாரிக்கிறது. மிகவும் முக்கியம் வாந்த இந்த உச்ச நீதிமன்ற அமர்வுக்கு முன்னதாக இஸ்ரேலியர்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களைத் தொடங்கினார்கள். 
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட, நீதித்துறை மறுசீரமைப்பு தொடர்பான உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு முன்னதாக, ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் ஜெருசலேம் முழுவதும் பேரணி நடத்தினார்கள்

"ஜனநாயகம்! ஜனநாயகம்!" (Democracy) என்று கோஷமிட்ட போராட்டக்காரர்களின் கைகளில் நீலம் மற்றும் வெள்ளை இஸ்ரேலியக் கொடிகள் காணப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் முன். செவ்வாய்கிழமை (செப்டம்பர் 12) உச்ச நீதிமன்றம் வரலாற்றில் முதல்முறையாக 15 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரிக்கிறது.

போராட்டத்தில் கலந்துக் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் புகைப்படங்களில் இது சமூக ஊடகங்களில் வைரலாவதுடன், பெரும் திரளான மக்களின்  கூட்டத்தையும் காட்டுகிறது.

தாராளவாத ஜனநாயக நாடான இஸ்ரேலை பாசிச ஆட்சியாக மாற்றும் இந்த சிதைந்த அரசாங்கத்தின் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கு நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்று அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களில் ஒருவரான 42 வயதான பேராசிரியர் மைக்கேல் டெலியாஸ் கூறியதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இந்த நீதித்துறை சீர்திருத்த முன்மொழிவை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், அதன் அதிகாரத்தை கட்டுப்படுத்துவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை," என்று டெலியாஸ் மேலும் கூறினார்.

மேலும் படிக்க - ஆழ்கடலில் மர்ம தங்க முட்டை! ஏலியன் முட்டையா? ராக்கெட் பாகமா?

நெதன்யாகு அரசாங்கத்தின் நீதித்துறை மறுசீரமைப்பு முன்னெடுப்பு, மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலில், இதுவரை இல்லாத மோசமான உள்நாட்டு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் சில அதிகாரங்களைத் தடுக்கும் 'சீர்திருத்தத் திட்டத்தை' திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அரசால் முன்வைக்கப்படும் மாற்றங்கள் நீதிமன்றங்களின் சுதந்திரத்தை குறைக்கும், ஊழலுக்கு வழிவகுத்து, இறுதியில் நாட்டின் ஜனநாயக அமைப்பை பலவீனப்படுத்தும் என்று போராட்டக்காரர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மசோதாவின் முதல் பகுதி நிறைவேற்றப்பட்டது
ஜூலை மாதம் இஸ்ரேலிய பாராளுமன்றம், நெசெட் நீதித்துறை சீர்திருத்த மசோதாவின் முக்கிய அம்சத்தை நிறைவேற்றியது, இது உச்ச நீதிமன்றத்தை நடுநிலையாக்கியது. "நியாயமான மசோதா" (reasonableness bill) என்று அழைக்கப்படும் இது, அரசாங்க முடிவுகளை நியாயமற்றது என்று அறிவிக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றத்திடம் இருந்து பறிக்க முயல்கிறது.

மேலும் படிக்க - அதி பயங்கர சர்மட் ஏவுகணையை நிலைநிறுத்திய ரஷ்யா... பீதியில் NATO நாடுகள்!

நியாயமான மசோதா என்பது வலதுசாரி கூட்டணியால் இஸ்ரேலின் நீதித்துறை அமைப்பில் சீர்திருத்தங்களின் பரந்த தொகுப்பின் ஒரு பகுதி மட்டுமே. நீதிபதிகள் நியமனத்தில் அரசியல்வாதிகளுக்கு அதிக அதிகாரம் வழங்குவது அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் மற்ற திட்டங்களில் அடங்கும்.

தனது லிகுட் கட்சிக்கும், தீவிர வலதுசாரி மற்றும் தீவிர ஆர்த்தடாக்ஸ் யூத கூட்டாளிகளுக்கும் இடையே அரசாங்கத்தை நடத்துவதற்காக கூட்டணியை ஏற்படுத்திய நெதன்யாகு, நீதித்துறையில் தொடர்ந்து மாற்றங்களை புகுத்த முயல்கிறார். ஆனால், புதிய சட்டம் நீதிமன்றம், அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை உருவாக்கும் என்று நெதான்யாகூ கூறுகிறார். 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பல்வேறு துறையினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மருத்துவம் இராணுவம் என எந்தத்துறையினரும் இதற்கு விலக்கில்லை.  ஆனால், எதிர்ப்புகளை மீறி உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை சில மாதங்களுக்கு முன்னதாக இஸ்ரேல் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
இதுபோன்ற சிக்கல்களால் இஸ்ரேலிய சமுதாயம் ஆழமாக பிளவுபட்டு, நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. ஆனால், நவம்பர் மாதத்திற்குள் மேலும் ஒரு சட்டத்தை உருவாக்க விரும்புவதாக நெதன்யாகு தெரிவித்ததும், 
இஸ்ரேல் "ஒரு வலுவான ஜனநாயகம் மற்றும் எதிர்காலத்தில் இப்படியே இருக்கும்" என்று கூறுவதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | எல்லையில் கடும் மோதல்... பாகிஸ்தான் ராணுவத்தினரை கொன்று குவிக்கும் ஆப்கான் தீவிரவாதிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News